முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

வளைகுடா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக…இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை !



உலகம், பிப்ரவரி 08/2016: வளைகுடா நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அந்த நாடுகளில் வேலைக்கு சென்ற இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல லட்சம் பேர், சொந்த ஊர் திரும்புகின்றனர்.

குவைத், பக்ரைன், கத்தார், ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள். இவை, வளைகுடா நாடுகள் என, அழைக்கப்படுகின்றன.இங்கு, கச்சா எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் அபரிமிதமான பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும், வெளிநாட்டு பணியாளர்களையே நம்பி உள்ளனர். பொறியாளர்கள், செவிலியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், வீட்டுப் பணியாளர்கள் என, பெரும்பாலான பணிகளில், வெளிநாட்டினரே ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து, 50 லட்சம் – 70 லட்சம் தொழிலாளர்கள் அங்கு சென்று பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த, 10 லட்சம் – 15 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

கடந்த, 10மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தையில், அமெரிக்காவின் கொள்முதல் குறைவு; ஈராக் எண்ணெய் ஏற்றுமதிக்கு இருந்த தடை நீக்கம்; வளைகுடா நாடுகளின் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு ஆகியவற்றால், கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால், பல எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு சென்றுள்ளன. தொடர்ந்து செயல்படும் நிறுவனங்களில், ஊதிய உயர்வு நிறுத்தம்; பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதி போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கச்சா எண்ணெய் மூலம் கிடைத்த வருவாயில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, வளைகுடா நாடுகளின் அரசுகள், புதிய வரிகளை விதிக்க துவங்கி விட்டன. குறிப்பாக, மின் கட்டணம்கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. நிறுவனங்கள் அளிக்கும் குடியிருப்பு வசதி ரத்து செய்யப்பட்டதால், வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்து விட்டது. வருமான வரி, 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதோடு, 4 சதவீத மதிப்புக் கூட்டு வரி, புதிதாக அறிமுகம்செய்யப்பட்டு உள்ளது. பள்ளி கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், வெளிநாட்டில் இருந்து சென்ற தொழிலாளர்களின், மாத வருவாயை முழுவதுமாக செலவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால், குடும்பத்துடன் வசித்து வந்த, இந்திய தொழிலாளர்கள், குடும்பங்களை, இந்தியாவுக்கு திரும்ப அனுப்புகின்றனர். தனியாக வசித்து வந்த பல தொழிலாளர்கள், மாத வருமானம் போதாத நிலையில், நாடு திரும்புகின்றனர்.

இப்படி நாடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவர்களின் மறுவாழ்வுத் திட்டங்களை, கேரள மாநில அரசு உருவாக்கி வருகிறது. தமிழக தொழிலாளர்கள் கொஞ்சம், கொஞ்சமாக நாடு திரும்பி வருவதால், அரசின் முழு கவனம், இன்னும் இவர்கள் பக்கம் திரும்பவில்லை.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)