முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

யாகூப் மேமன் வழக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு !!!


மும்பை, ஆகஸ்ட் 10: சீராய்வு மனு விதிகள் தொடர்பான விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துமாறு, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் டைகர் மேமன் தலைமறைவானதை தொடர்ந்து அவருடைய தம்பி யாகூப் மேமன் வழக்கில் அரசிற்கு உதவி செய்வதற்காக இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார் ஆனால் காவல்துறை அப்பாவியான அவர்மீது வழக்கு பதிவு செய்து 22-ஆண்டுகள் சிறையில் அடைத்து இறுதியாக யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து யாகூப் மேமன் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. யாகூப் மேமனின் சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 30-ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இந்நிலையில், யாகூப் மேமன், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, குரியன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, யாகூப் மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜூ ராமசந்திரன், “மேமனின் சீராய்வு மனு தொடர்பான விசாரணையில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; அவரது சீராய்வு மனு விசாரணையில் இருந்தபோதே அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, சீராய்வு மனு தொடர்பான விதிகள் குறித்து உரிய விளக்கங்களை செவ்வாய்க்கிழமை அளிக்குமாறு மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் பிறகே, யாகூப் மேமனின் மரண தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முத்துப்பேட்டையில் SDPI கட்சி மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி கொடி ஏற்றினார்.


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடி ஏற்று விழா பேரூராட்சி அலுவலகம் அருகில் கடந்த 03.08.2015 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சேக் முகைதீன் தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்துக் கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். 

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், மண்டல தலைவர் நாகை தாஜ், மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட பொதுச் செயலாளர் நெய்னா முகம்மது, பாப்புலர் பிரண்ட் அமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் அப்துல் மாலிக் நன்றி கூறினார்.

முத்துப்பேட்டை செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்பு வாசிகளுக்கு நேற்று பேரூராட்சி இறுதி நோட்டீஸ். வாங்க மறுத்த குடியிருப்புகளில் நோட்டீசை ஒட்டியதால் பரபரப்பு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கடந்த ஆண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைக்கேடான பணிகளை எதிர்த்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து உயர்நீதி மன்றம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைக்கேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி 3 மாதங்களுக்கு முன்பு பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் மற்றும் பள்ளி வாசல்கள் உட்பட ஏராளமான குடியிருப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.

 இந்த நிலையில் அதே வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற வழிக்காட்டுதலின் படி சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கடந்த மாதம் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு அகற்ற தான் அனுப்பிய மனு மீது தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை.

 மேலும் உயர் நீதி மன்றம் உத்தரவுபடி தமிழக அரசு நியமணம் செய்த தனி ஆணைப்படி அவர்கள் பணி செய்யாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர எனக்கு அனுமதித் தர வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க முடிவு செய்து கடந்த மாதம் 40 ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலை பேரூராட்சியில் ஒப்படைத்தனர். 

அதன்படி சென்ற மாதம் பேரூராட்சி சார்பில் செக்கடிக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 10 நாள் கெடு விடுத்து நோடீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள முன்வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து இறுதி நோட்டீஸ் வழங்கினர். பலரும் நோட்டீசை வாங்க மறுத்தனர் அதனாலும், பலர் வீட்டில் இல்லாததாலும் அவர்களது குடியிருப்புகளில் பேரூராட்சி அலுவலர்கள் நோட்டீசை ஒட்டி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Reporter By   

முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

முத்துப்பேட்டை திருமணம் நிகழ்ச்சிக்கு திடீரென்று வந்த நடிகர் பாக்கிய ராஜ். பெரும் பரபரப்பு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் தொழில் அதிபர் டாக்டர்.ஹைதர் அலி வீட்டு திருமணம் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். அப்பொழுது எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென்று நடிகர் பாக்கியராஜ் திருமண மண்டபத்துக்கு மணமக்களை வாழ்த்த வந்திருந்தார். 
இதனைக் கண்ட மக்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு நலம் விசாரித்ததுடன் அவருடன் நின்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஆனது. பின்னர் மண மேடைக்கு சென்ற நடிகர் பாக்கியராஜ் மணமக்களை வாழ்த்தியும் தொழில் அதிபர் ஹைதர் அலியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மதிய உணவை சாப்பிட்டு விட்டு அங்கு இருந்தவர்களிடம் எழிமையாக நின்று பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பி சென்றார்.

Reporter By   

முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தானில் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி கடை அடைப்பு. ஆளுங்கட்சி பிரமுகர்கள் கடையைத் திறக்கக் கூறியதால் பெரும் பரபரப்பு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்நதானில் (05.08.2015) நேற்று அனைத்து கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி நடந்த முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்து அனைத்து கடைகளும் அடைகப்பட்டிருந்தன. அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் கடையைத் திறக்கச் சொல்லி வறுப்புறுத்தினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் போலீசார் இரு தரப்பினரின் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

இருந்தாலும் வியாபாரிகள் மற்றும் முழு அடைப்பில் பங்கேற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கடைத் தெரு பகுதியில் கூட்டமாக கூடினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் பத்திரிக்கையர்ளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அவர்களது கோரிக்கைகளை வழியுறுத்தி பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் செல்வகுமார் கூறுகையில்: தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிய காந்தியவாதி சசிபெருமாள் தனது உயிரை இழந்துள்ளார். 

அவரது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இன்று(நேற்று) நடக்கின்ற முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனை சீர் குலைக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் கடையைத் திறக்க வறுப்புறுத்தி உள்ளது கண்டிக்கக்குரியது. இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றார்.

Reporter By   

முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

முத்துப்பேட்டையில் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: முத்துப்பேட்டையில் நேற்று (04.08.2015) அன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீஸார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், நிர்வாகி கண்ணதாசன், மற்றும் தில்லைவிளாகம் செந்தில், துரைத்தோபபு இலவரசன், பெருகவாழ்ந்தான் சிவம்பரசன், ஆரியலூர் டெஸ்சி மற்றும் வினோத் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்திருந்தனர். 

இந்த நிலையில் நேற்று வேரொரு வழக்கிற்காக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த பெரியநாயகம், முருகேஷ்;, ரவி ஆகிய 3 பேரை இந்த வழங்கில் சேர்க்கப்பட்டு கைது வைத்திருந்தனர். நேரம் ஆனதும் திடீரென்று போலீசார் அவர்கள் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி கோர்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Reporter By   
முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication  

முத்துப்பேட்டை குத்பா பள்ளி வளாகத்தில் மீண்டும் கலை கட்டிய நோன்பு 27 விருந்தோம்பல் புகைப்பட காட்சி







முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: நமதூர் முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் கடந்த சில வருடங்கள் கழித்து இந்த 2015 ஆம் வருடம் மீண்டும் நோன்பு பிறை 27 ஆம் கிழமை அழகிய விருந்தோம்பல் நடைபெற்று இதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தல 100 சகன் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளாமான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விருந்துகள் பரிமாறப்பட்டன.

Reporter By 

முஹமது இல்யாஸ். MBA , MA. Journalism & Mass Communication 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)