முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

உயர் நீதிமன்றம் உத்தரவுபடி பட்டரை குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில், பள்ளிவாசல்கள் வீடுகள் இடிக்கப்பட்டது.




முத்துப்பேட்டை, ஏப்ரல்/17/2015: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மிக பெரிய பரப்பளவில் பட்டரைக்குளம் உள்ளது. இதில் சுற்று புறமும் தனியார் ஆக்கிரமிப்பு செய்ததால் குளம் சுருங்கி குட்டையாக மாறிவிட்டது. மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்களையும் தனியார் ஆக்கிரமித்தால் தண்ணீர் வர தடைப்பட்டு குளம் வரண்டு போகி இதனால் சுமார் 10 வருடங்களுக்கு மேல் குளம் மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் போனது. இந்த நிலையில் சென்ற ஆண்டு பேரூராட்சி நிர்வாகம் மக்கள் பயன் பாட்டில் இல்லாத இந்த பட்டரை குளத்திற்கு தூர் வாரி சுத்தம் செய்ய 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டு செய்தது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் மதிப்பீட்டுக்கு முரனாக குளத்துக்குள் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு வசதியாக தடுப்பு சுவர் மற்றும் நல்லநிலையில் இருந்த படித்துறைகளை இடித்து புதிய படித்துறை கட்டும் பணிகளை மேற்கொண்டனர். இதனை தடுத்து நிறுத்த முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகமது மாலிக் என்பவர் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தார். இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை. 

இதனால் அதிர்ப்தி அடைந்த சமூக ஆர்வலர் முகமது மாலிக் இதனை எதிர்த்து கடந்தாண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 3 மாதக்காலம் அவகாசம் கோரியது. அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் பேரூராட்சி நிர்வாகம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு வருகிற மார்ச் 15-ந்தேதிக்குள் நீதிமன்றதில் ஆதாரங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தை அளவீடு செய்து ஒரு கோவில், இரண்டு பள்ளிவாசல், மற்றும் 39 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோடீஸ் அனுப்பியது. இதில் பேரூராட்சியில் பணி புரியும் துப்பரவு தொழிலாளர்களின் 25 வீடுகள் முழுவதும் அகற்றும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் யாரும் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. அதனால் சென்ற மாதம் 15-ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கால அவசாசம் கோரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் கடும் கண்டனத்துடன் ஏப்ரல் 23-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அதற்கான ஆதரங்களை கோர்டில் ஒப்படைக்க வேண்டும் என்று பல கண்டிசன்களுடன் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டனர். இந்த நிலையில் கடந்த வாரம் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மீண்டும் இறுதி நோடீஸ் அனுப்பியது. இதனையும் யாரும் கண்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று காலை ஆக்கிமிப்புகளை அகற்ற மன்னார்குடி ஆர்.டி.ஓ.செல்வசுரப்பி தலைமையில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், தணைத் தாசில்தார், அன்பழகன், பேரூராட்சி உதவி இயக்குனர் மணி, செயல் அலுவலர்கள் சித்தி விநாயக மூர்த்தி, நாராயண மூர்த்தி, காளியப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் தினேஷ் குமார், கிருஷ்ணக்குமார், ராஜராஜசோழன் மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பேரூராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மறறும் வருவாய் துறையினர் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். அப்பொழுது திருவாரூர் ஏ.டி.எஸ்.பி.ராமசந்திரன் தலைமையில், முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், மன்னார்குடி டி.எஸ்.பி.அருளானந்தம் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிருத்தப்பட்டிருந்தது. இதில் குளத்தின் வடக்கு கறையில் இருந்த விநாயகர் கோவில் தெற்கு கரையில் இருந்த மதினா பள்ளிவாசல் ஆகியவை அடியோடு இடித்துத்தள்ளப்பட்டது. மேற்கு கரையில் உள்ள புதுப்பள்ளி வாசல் சுற்று சுவர் மற்றும் அப்பகுதியில் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. 

பின்னர் துப்புரவு பணியாளர்களின் வீடுகள் இடிக்கும் பொழுது அதிகாரிகளுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் துப்பரவு பணியாளர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு கூடி நின்று அழுது தடுக்க முயன்றனர். இருந்தும் அதிகாரிகள் அதிரடியாக வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் சுமார் 30 பேர் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குளத்தை சுற்றிலும் கூட்டமாக கூடி வேடிக்கை பார்த்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் முத்துப்பேட்டையில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துப்பேட்டையில் பல முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)