முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை,


முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று மாலை ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையர்கள் சாந்தி, வெங்கடேசன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது முதலில் பேசிய தி.மு.க கவுன்சிலர் ராமமூர்த்தி: கடந்த 23-ம் தேதி அரசியல் கால்புணர்ச்சியின் காரணமாக தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் போலீசார் சோதணை போட்டது கண்டணத்துக்குரியது என்றார். அடுத்ததாக தி.மு.க கவுன்சிலர் கண்ணன் பேசுகையில்: எந்த வித குற்றச்சாட்டும் கூறப்படாத பெண் கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் அதிரடியாக போலிசார் உள்ளே புகுந்து சோதணை போட்டது எங்களை அதிர்ச்சியில் ஆக்கி உள்ளது. 
சாதாரண பெண் கவுன்சிலருக்கே இந்த கதி என்றால் எங்களையெல்லாம் இவர்கள் என்ன செய்வார்கள்? இவர்களுக்கு சோதணை போட யார் அதிகாரம் கொடுத்தது? யார் தைரியம் கொடுத்தது? இதற்கு காவல் துறையின் உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய கவுன்சிலர் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இதற்கு இந்த கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசி டேபிளைத் தட்டி கடும் ரகளையில் ஈடுப்பட்டார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர் ஜெகன் பேசுகையில்: இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி.யிடம் நாமெல்லாம் ஒன்று திரண்டு புகார் மனு அளிக்க வேண்டும் என்றார். அதே போல் ஒன்றிய துணைத் தலைவர் தெட்சினா மூர்த்தி, இ.கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சாமிநாதன், காங்கிரஸ் கவுன்சிலர் புனிதா உட்பட அனைத்து கவுன்சிலர்களும் பெண் கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் போலீசார் சோதணை போட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பேசி ரகளையில் ஈடுப்பட்டதால் முத்துப்பேட்டையில் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

முத்துப்பேட்டை அருகே கேஸ் விநியோகத்தை இடம் மாற்றம் செய்ததை கண்டித்து நடக்க இருந்த சாலை மறியல் அதிகாரிகள் சமரச பேச்சால் வாபஸ்.


முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்திலும், அதன் சுற்று வட்டார பகுதியிலும் ஆயிரக்கணக்கான அரசு கேஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள திருத்துறைப்பூண்டி கேஸ் விநியோகஸ்தரிடமிருந்து சிலிண்டர் பெற்று வந்தனர். இந்த நிலையில் முத்துப்பேட்டையில் தனி கேஸ் விநியோகஸ்தர் நியமணம் செய்யப்பட்டதால் இங்குள்ள குன்னலூர் பகுதி வாடிக்கையாளர்களையும் கேஸ் நிறுவனம் முத்துப்பேட்டையில் பெற மற்றம் செய்தது. இதனால் குன்னலூர் மற்றும் அதன் சுற்று பகுதி மக்கள் 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் உள்ள முத்துப்பேட்டையில் பெறும் நிலை ஏற்ப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர். 
இந்த நிலையில் குன்னலூர் கிராம மக்கள் சார்பில் இந்த நிலையை கண்டித்தும், உடன் இப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் திருத்துறைப்பூண்டிக்கே மாற்றி தரக்கோரியும் இன்று 25-ந்தேதி குன்னலூர் கடைதெருவில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் தலைமையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஆடலரசன், தி.மு.க மாவட்ட பிரதிநிதி அன்பழகன், காங்கிரஸ் வட்டார வர்த்தக பிரிவு தலைவர் வடுகநாதன், த.மா.கா தலைவர் சந்திரசேகரன், சி.பி.ஐ கிளைச்செயலாளர் பழனி, சி.பி.எம் கிளைச்செயலாளர் பன்னீர்செல்வம், தே.மு.தி.க தலைவர் சுரேஷ்; மற்றும் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் திருத்துறைப்பூண்டியிலேயே சிலிண்டர்கள் பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறி எழுதி கொடுத்ததால் சாலை மறியல் போராட்டத்தை விளக்கி கொண்டதாக அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

முத்துப்பேட்டையில் எதிர்ப்பார்த்து காலத்தாமதமாக கூட்டம் துவங்கியதால் மயங்கி விழுந்த மூதாட்டி.



முத்துப்பேட்டை, பிப்ரவரி/26/2015முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மக்கள் நேற்காணல் முகாம் நேற்று நடைபெற்றது. நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி தலைமை வகித்தார். மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வ சுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் 105 பேருக்கு கல்வி கடன், 25 பேருக்கு பட்டா மாற்றுதல், 55 பேருக்கு புதிய ரேசன் கார்;டு, 2 பேருக்கு சலவைப்பெட்டி, 11 பேருக்கு தையல் மிசின், 7 பேருக்கு உரம் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், தாட்கோ மேலாளர் வைத்தியநாதன், ஒன்றிய ஆணையர்கள் சாந்தி, வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், கால்நடை மருத்துவர் கங்கா சூடன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சிக்குளம் தாகீர், முன்னால் ஒன்றிய கவுன்சிலர் பழணிவேல், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜசோழன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 10 மணிக்கு துவங்க வேண்டி நிகழ்ச்சியை கலெக்டரை எதிர்பார்த்து திடீரென்று அவர் வராததால் 12 மணிக்கு நிகழ்ச்சி துவக்கப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் எல்லோருக்கும் சோர்வு ஏற்பட்டு பலரும் தூங்கினர். அப்பொழுது நிகழ்ச்சி துவங்;கிய சில நிமிடங்களில் ஒரு 70 வயது மூதாட்டிக்கு மயக்கம் ஏற்பட்டு நிகழ்ச்சி மேடை அருகே விழுந்தார். உடன் வருவாய் துறையினர் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்து மேடை எதிர்புறம் படுக்க வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல்...



புது டெல்லி, பிப்ரவரி/26/2015: இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் முழுமையான வரவுசெலவுத் திட்டம் என்பதால் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னுரிமை கொடுக்க உள்ளார். இந்தியாவில் ஏழைகளும் குளிர்சாதன ரயிலில் செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதை ஏற்று குளர்சாதன ரயில்கள் இன்றைய வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில்களில் பயணக் கட்டணமும் மிகவும் குறைவாக இருக்கும்.
.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)