முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை கலவரத்திற்கு காவல்துறையும் உடந்தை -INTJ மாநில செயலாளர் பிர்தவ்சி பரபரப்பு குற்றச்சாட்டு !!!





முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி சார்பில் கடந்த 03-09-2014 அன்று விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டது .அப்போது ஊர்வலத்தில் வந்த ரவுடி கும்பல்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் மீது கல் வீசி தாக்கி வன்முறையில் ஈடுப்பட்டனர்.இதனால் முத்துப்பேட்டையில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு ,அமைதியற்ற சூழல் உருவாகி மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .இதனை அறிந்த இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் முத்துப்பேட்டை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் .இந்நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் பிர்தவ்சி முத்துப்பேட்டைக்கு வருகை தந்து இந்துமுன்னணி வன்முறை கும்பல்களால் தச்க்குதளுக்குள்ளான வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் .பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .

அப்போது பேசிய அவர் ,விநாயகர் ஊர்வலத்தில் நீதிமன்ற உத்தரவு மீரப்பட்டுள்ளதகவும் , விநாயகர் ஊர்வலம் செல்லும் நேரம் சரிவர பின்பற்ற படவில்லை என்றும் இதற்கு மாவட்ட காவல்துறையின் அலட்சிய போக்கே கரணம் என்றும் குற்றம் சாட்டினார் .கடந்த 20 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் விநாயகர் ஊர்வலம் சென்று வந்ததாகவும் ,இதனை நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண உதவியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ,இதற்கு பெரிதும் முயற்சி எடுத்து வெற்றி காண போராடியது இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளரான முத்துபேட்டை ஷிப்லி என்றும் பெருமிதத்தோடு கூறினார் .

மேலும் வரக்கூடிய காலங்களில் இஸ்லாமியர்களின் பகுதிகளுக்குள் விநாயகர் ஊர்வலத்தை அறவே வர விடாமல் தடுப்பதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சட்ட ரீதியிலான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ,பிர்தவ்சி கூறினார் .

முன்னதாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் பிர்தவ்சி மற்றும் ரஸ்தா செல்வம் ,பியுட்டி நவாஸ்கான் , கவுன்சிலர் பாவா ,நிஜாம் ஆகியோர் திருத்துறைபூண்டியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாரை சந்தித்து பேசினார் .

செய்தி :ஜே : ஷேக் பரீத்


முத்துப்பேட்டையில் இந்து முன்னணி வெறியாட்டம் -தமுமுக மாநில செயலாளர் கோவைசெயயது நேரில் ஆறுதல் !!















முத்துப்பேட்டையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 18 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது அவர்கள் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் பாதிக்கப்பட்ட வீடு மற்றும் கடைகளை தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது அவர்கள் முத்துப்பேட்டை நகர தமுமுக நிர்வாகிகளிடம் நிலவரத்தை கேட்டரிந்தார் உடன் மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா,மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்


முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம் -TNTJ மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி நேரில் ஆய்வு !!!


முத்துப்பேட்டை வினாயகர் ஊர்வலத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை தவ்ஹித்ஜமாத் மாநில செயளாலர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி மற்றும் மாவட்ட மாநில நிர்வச்கிகள் நேரில் சந்ந்திப்பு ஆறுதல்கூறினர்.
முத்துப்பேட்டை வினாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அடித்து நொருக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே!!

சம்பவம் நடந்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்க்கு சென்ற தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் நிலமையை நேரில் ஆய்வுசெய்தனார்

உடனடியாக மாவட்ட மாநில நிர்வாகிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டது மாநில நிர்வாகிகள் மூலமாக சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டது

மாவட்ட மாநில நிர்வாகிகளின் ஆலோசனைபடி அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர்

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு ஆவேசமாக களத்தில் இறங்கிய சகோதரர்களிடம் எதையும் சட்டப்படி செய்வதில்தான் வெற்றிகிடைக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவ்ஹித்ஜமாத் ஆவனசெய்யும் என உறுதிகொடுக்கப்பட்டது

அப்பொழுதே மஸ்ஜித்நூரில் அவசர ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டது உடனடியாக பாதிக்கட்ட சகோதரர்களை அழைத்துத்துசென்று காவல்துரையில் புகார் செய்வது என முடிவு செய்யப்பட்டது

புகார்கொடுக்க காவல்நிலையம் சென்ற நிர்வாகிகளிடம் புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

நடந்த அசம்பாவிதங்களுக்கு காரனமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் தாமதாகும் பட்சத்தில் மாநில தலைமையின் ஆலோசனைபடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்!! என்று தவ்ஹீத் ஜமாஅத் எச்சரித்துள்ளது .


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)