முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மயிலாடுதுறையில் திருமணத்திற்கு சென்ற இரண்டு பெண்கள் காரில் கடத்தல் -நகை மற்றும் பணம் பறிப்பு பதற்றம் !!!




































நாகை மாவட்டம் சோழசக்கரநல்லூரை சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் மயிலாடுதுறையை அடுத்த கிளியனூருக்கு திருமணத்திற்கு சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்து கிளியனூர் கடைத்தெருவில் பேரூந்துக்காக காத்திருந்த போது அம்பாசிடரில் வந்த இருவர் நாங்கள் மயிலாடுதுறை செல்கிறோம் என்று சொனனதால் இருவரும் காரில் ஏறியுள்ளனர்.
மயிலாடுதுறை வருவதற்குள் நாங்கள் சிதம்பரம் செல்கிறோம் நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள் என்று கேட்க நாங்கள் சோழசக்கர நல்லுர் செல்கிறோம் என்று சொல்ல இவர்களை மிரட்டியவாறு கார் சிதம்பரம் சென்றது.

கார் மயிலாடுதுறையை தாண்டியபோது இன்னும் இரண்டுபேர் காரில் கத்தியுடன் ஏறி இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி அவர்களை சிதம்பரம் கடத்தி சென்று அவர்கள் இருவருடமிருந்த 35 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அவர்களிடமிருந்த செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டு சிதம்பரத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சோழசக்கர நல்லுர் வந்து பின்னர் மயிலாடுதுறையில் காவல்நிலையத்தில் புகார் செய்துயுள்னர்.
காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஆண் துணையின்றி பெண்கள் தனியாக செல்வதும், அறிமுகம் இல்லாத கார் மற்றும் வேன்களில் பிரயாணம் செய்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...
இது ஓர் விழிப்புணர்வு பதிவு, அதிகப்படியாக Share செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்...

பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை - தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் ஒத்திவைப்பு !!

இன்று பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ADSP முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் S.l. பிச்சை முத்துவை பணி குறைப்பு (Degraded) செய்து ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ADSP ஒரு வாரம் கால அவகாசத்தில் துரை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் வரும் 26-08-2014 அன்று மாற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துரில்லாஹ்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)