முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தொடங்கியது குற்றால சீசன் --குடும்பத்தோடு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் !!!

தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தாமதமாக  துவங்கியதுடன் சாரலும் தொடர்ச்சியாக இல்லாமல்  ஏமாற்றி வந்தது.  இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சாரல் பெய்து வருகிறது. குறிப்பாக  குற்றாலம் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் நன்றாக பெய்து வருகிறது.  இதன்காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.  ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.  மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து  விழுகிறது. புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியிலும்  தண்ணீர் நன்றாக விழுகிறது. முழு வீச்சில் சீசன் தொடங்கியது.



ஆனால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராகவே இருந்தது.  மெயினருவியில் நேற்று மதியம் சுற்றுலா பயணிகள் குளித்துக்  கொண்டிருந்தபோது 2 நீர்ப்பாம்புகள் தண்ணீருடன் விழுந்தன. இதை  பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால்  பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார்  10 நிமிடம் கழித்து பரபரப்பு அடங்கியதும் மீண்டும் குளிக்க  அனுமதிக்கப்பட்டனர்.அதே போல் குற்றாலத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது பாலருவி .குற்றாலத்தில் குளித்து முடித்த  சுற்றுலா பயணிகள் பாலருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர் .இந்நிலையில் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்  ஷேக்பரீத் குற்றாலத்திற்கு குடும்ப சுற்றுலா சென்றார் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்தார் .

..அவருடன்  சென்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முத்துப்பேட்டை  நகர பொருளாளரும் ,நேனா மோட்டார்ஸ் நிறுவனத்தின்  உரிமையாளருமான ஜனாப் ,ஹாஜி .ஹஜ் முஹம்மது உள்ளிட்டோரும் சென்றிருந்தனர் .

குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ,செண்பக அருவி ,பழைய குற்றால அருவி ,ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மனித கழிவுகள் ஆங்காங்கே அசுத்தமாக கிடப்பதாகவும் ,சிறுநீர் துர்நாற்றம் வீசுவதாகவும் ,  போதிய பராமரிப்பின்றி   உள்ளதாகவும் ,குற்றம் சாட்டினார் .

இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளவதாகவும்  ,இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார் .

மேலும் அருவியின் மைய பகுதிக்கு சென்று ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு குளிப்பதை காண முடிகிறது என்றும் ,இதனால் உயிரிழப்புகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார் .இதனை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் போதிய காவல்துறையினரை அங்கு  பணியமர்த்த  வேண்டும் என்றும் ,காவலர்களுக்கு ஒலிபெருக்கி ,டார்ச் லைட் உள்ளிட்ட நவீன கருவிகள் வழங்கப்பட்டால் விபத்துக்களை தடுக்க  எதுவாக இருக்கும் என்றும் கூறினார் .

மேலும் குற்றால அருவிகளில் மனிதர்கள் நடமாடும் பகுதிகளுக்குள் குரங்குகள் சுற்றிதிரிவதால்  பயணிகள் ,மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற  சூழ்நிலை நிலவுவதாகவும் ,இதனை கட்டுபடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,சுற்றுலா பயணிகளின் பொருட்கள் மற்றும் உடமைகளை  பாதுகாக்க தனியான அறைகள் கட்டப்பட வேண்டும்  என்றும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார் .

சந்திப்பு :கொய்யா :முஜாஹிதீன் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)