பாஜக கட்சியினர் வெற்றிக் களியாட்டம் என்ற பெயரில் கர்நாடக மாநிலம் பீஜப்பூரில் நடத்திய ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து பாஜகவினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதலாக அது உருவெடுத்தது.
கர்நாடக காவல்துறையினரின் தகவல்களின் படி 10-க்கும், மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
002 பாஜக 2
தமது பெயரை வெளியிட விரும்பாத உள்ளூர்வாசிகளின் தகவலின்படி:
‘திங்கள் கிழமை பிற்பகலில், முன்னாள் கர்நாடக அமைச்சரான ‘பசன் கௌடா பட்டேல் யத்னாலின்’ தலைமையில் நடத்தப்பட்ட பாஜகவின் வெற்றி ஊர்வலம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காந்தி சௌக் மார்க்கெட் வழியாக சென்றது. அப்படி செல்லும்போது, பிற சமூகத்தினர் புண்படும் விதமான பாட்டுகளும், ராமர் கோவிலை கட்டுவோம் என்ற கோஷங்களும் எழுந்துள்ளன. அத்துடன் பாதசாரிகள் மீதும், மார்க்கெட்டில் கடை வைத்திருந்த வியாபாரிகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் மீதும் ஊர்வலத்தினர் வண்ணப்பொடி தூவியிருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலுக்கு கடைக்காரர்கள் பழங்களை எடுத்து ஊர்வலத்தினர் மீது எறிந்திருக்கிறார்கள். பதிலுக்கு பாஜகவினர் கற்களை வீசி தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து கலவரம் மூண்டதாகவும் சொல்லப்படுகிறது.
003 பாஜக 4
அதன்பின்னர், ஊர்வலமாக திரண்டு சென்ற பாஜக தொண்டர்கள் ‘காந்தி சௌக், சிவாஜி செளக்’ மற்றும் ‘பஸ்வேஷ்வர்’ சாலையிலிருந்த வாகனங்களையும், குறிப்பிட்ட சமூகத்தினரின் கடைகளையும், நிறுவனங்களையும் அடித்து நொறுக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது, அங்கு சட்டம், ஒழுங்கு சீர்க்குலையாமலிருக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும், மக்கள் அமைதிக்காக்கும்படியும்’ – அமைச்சர் எம்.பி.பட்டேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலவரத்துக்குக் காரணமானவர்களை கைது செய்யும்படி அவர் உத்திரவிட்டிருப்பதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
FacebookTwitterGoogle+LinkedIn