முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பூஜையில் பெண்ணுடன் சாமியார் உல்லாசம்: டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பானதால் ஓட்டம்

பெங்களூர், ஏப்.29-

வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னை தானே விளம்பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி ஸ்ரீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது. 

பூஜையில் பெண்ணுடன் சாமியார் உல்லாசம்: டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பானதால் ஓட்டம்
இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் டிரைவர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச்சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரை கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர். 

பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரியவில்லை.

அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!

கோலாலம்பூர் ( மலேசியா ) : சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.




இவ்விருது தி லீடர்ஸ் சர்வதேச வர்த்தக இதழ், அமெரிக்கன் லீடர்சிப் டெவலப்மெண்ட் அமைப்புடன் இணைந்து ஆண்டு தோறும் உலகெங்கிலும் வர்த்தகம், ஊடகம், அரசுத்துறை, சமூகசேவை, சுற்றுலா, தொலைத்தொடர்பு, கட்டுமானத்துறை, போக்குவரத்து உள்ளிட்ட 25 துறைகளில் சிறந்து விளங்கும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது உலகெங்கிலும் தலைசிறநத நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட விருதினை அவரது மகனும், புஹாரியா ஹோல்டிங்ஸ் இயக்குநருமான அஹமது புஹாரி ரஹ்மான் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி சமுதாயம் கல்வியில் முன்னேற முக்கியக் காரணமாக இருந்து வருபவர். இதன் காரணமாக கல்வி வள்ளல் என அழைக்கப்படுகிறார். தமிழகத்திலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பள்ளிவாசல் நிர்மாணத்திற்கும், கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படுவதற்கும் பல்வேறு உதவிகளை செய்து வருபவர்.
துபை ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் 75,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் மேம்பாட்டுக்கு காரணமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)