முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தர்ஹா பாக்கர் அலியுடன் மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு !!


தஞ்சைமாவட்டம் மல்லிபட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  திட்டமிட்டே கலவர நோக்கோடு  அனுமதியின்றி இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்குள் பிரச்சாரம் செய்ய முயற்சித்தனர் . 

அப்போது நான் வெற்றி பெற்றால் தஞ்சை மாவட்டத்தை குஜராத்தாக மாற்றுவேன் என்று அத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பாஜக வேட்பாளார் பிரச்சாரம் செய்துள்ளார் .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் இப்பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு , பல ஆண்டுகாலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்கள் ஆகவும் வாழ்ந்து வருகிறோம் என கூறி  உள்ளே சென்று பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்தனர் .

இதனால் ஆத்திரமடைந்த பாஜக வினர் அப்பகுதி மக்கள் மீது கற்களை வீசியும்   தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளனர் .மேலும் அங்கு நிறுத்தப்படிருந்த கார்களை அடித்து நொறுக்கியும் ,பெட்ரோல் பங்க் மீது தாக்குதல் நடத்தியும் ,மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை கொளுத்தியும் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர் .

மதநல்லிணக்க பூமியாக திகழ்ந்து வந்த மல்லிபட்டினம் ,பாஜகவின் வன்முறை வெறியாட்டத்தால் கலவர பூமியாக மாறியது .இதனை தொடர்ந்து முஸ்லீம்கள் தரப்பில் அப்பாவி இஸ்லாமியர்கள் 24 பேரையும் பாஜக வின் தரப்பில் 14 பேரையும் காவல்துறை கைது செய்தனர் .

இதுதொடர்பாக விசாரிப்பதர்காகவும் சட்ட ரீதியிலான உதவிகளை மேற்கொள்வதற்காகவும் மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகளான வழக்கறிஞர் ஜெயனுலாபிதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த 21 ஆம் தேதி மல்லிபட்டினத்திற்கு வருகை தந்தனர் .

பின்னர்  முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் பத்திரிக்கையாளரை சந்தித்த மறுமலர்ச்சி தமுமுகவினர் மல்லிபட்டினத்தில் நடைபெற்ற வகுப்பு கலவரத்தில் பாஜகவினர் சட்டம் ஒழுங்கை மீறியதாக குற்றம் சாட்டினார் .
இதனை தொடர்ந்து ஜாம்புவோனோடை சென்ற அவர்கள் பாக்கர் அலியுடன் சந்தித்து முத்துப்பேட்டை நிலவரம் குறித்து விவாதித்தனர் .

தகவல் :ஜே :ஷேக்பரீத் 





தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)