முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அதிரையில் வாகனம் மின்கம்பத்தில் மோதி நொறுங்கியது...





அதிராம்பட்டினம், ஜனவரி 07: அதிரையில் இன்று ஏற்பட்ட விபத்தில் வாகனம் மின்கம்பத்தில் மோதி நொறுங்கியது. அதிரை கடற்கரைதெருவை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் இன்று மதியம் 4 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரையை நோக்கி தனது இன்னோவா காரை ஓட்டி வந்துள்ளார். வாகனம் கூட்டுறவு வங்கி அருகே கடந்து செல்லும்போது எதிரே வரும் பேருந்தை அறிந்த இவர் திடீர் ப்ரேக் போட்டுள்ளார். உடனே வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள (மருத்துவர் ராஜு அவர்களின் கிளினிக் எதிரே) மின்கம்பத்தில் மோதி விபத்தானது.
இதில் மின்கம்பம் சேதமடைந்தது. இடது பக்கம் இருந்த கழிவு நீர் வாய்க்காலில் இறங்கியதில் வாகனத்தின் முகப்பு பகுதி, கதவுகள், கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.
மின்கம்பத்தில் மோதியதால் நிகழ இருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது. லேசான காயமடைந்த அஷ்ரப் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தகவலறிந்த மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பதை சரிசெய்தனர். விபத்து குறித்து அதிரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் சில மணிநேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு பொருத்தமானவர்கள் யார் ? கருத்து கணிப்பு நடத்துகிறது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் ?

























முத்துப்பேட்டை, ஜனவரி 08: 
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு யார் தகுதியானவர் யார் என்பதனை தெரிந்துகொள்ள கருத்து கணிப்பு நடத்துகிறது எக்ஸ்பிரஸ், உங்களின் கருத்துக்களை facebook இல் உள்ள முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் கணக்கில் பதிவு    செய்யுங்கள். 


ஒரு காலத்தில்  இஸ்லாமியர்கள் வசம் இருந்த முத்துபேட்டை பேரூராட்சி ஒரு சில சமுதாய துரோகிகளின்  பண போதையாலும், வெத்து பந்தா மற்றும் போலி செல்வாக்கை நிரூபிப்பதற்காகவும் மாற்று மதத்தவரிடம் அடகு வைத்துவிட்டனர் .



மாற்று மதத்தவர் ஆட்சிக்கு வருவதில் நமக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்றாலும் கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தோமேயானால்,ஆட்சியில் ஆமர்ந்திருந்த அனைவரும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராகத்தான்  செயல் பட்டுள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.



எந்த வருடமும் இல்லாத அளவிற்கு முத்துபேட்டையில், கடந்த முறை நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இஸ்லாமியர்களில் ஒரு சிறந்த நபர் தலைவராக வர வேண்டும் என்பதுதான் நம் முத்துபேட்டை மக்களின் கனவாகவும் நீண்ட நாள் ஆசையாகவும் இருந்து வருகிறது.



பொதுவாக பேரூராட்சி தலைவர்களுக்கு இது வரை அதிக பட்சமாக 3 அல்லது நான்கு பேர்கள் மட்டுமே போட்டியிடுவார்கள். ஆனால் கடந்த முறையோ முத்துபேட்டையில்  வராலாறு காணாத வகையில் 13 பேர் போட்டியிட்டனர்.



அதில் SDPI கட்சியின் சார்பில் அபூபக்கர் சித்திக் அவர்களை களமிறக்கியது.இவரை எதிர்த்து போட்டியிட இருந்த பல்வேறு நபர்களிடமும் வேட்பு  மனுவை வாபஸ் வாங்க கோரி  பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் வேட்பு மனுவை வாபஸ் வாங்க யாரும் முன் வரவில்லை.



இளைஞர்களின் தீவிர கள பனியாலும்  சூறாவளி பிரசாரத்தின் காரணமாகவும்  முத்துபேட்டை பேரூராட்சி மன்ற தேர்தலில் சித்திக் வெற்றி பெறுவார் என எக்ஸ்பிரஸ் முன் கூட்டியே கருத்து கணிப்பை  வெளியிட்டது. துரதிஷ்டவசமாக களத்தில் 13 பேர் போட்டியிட்டதால், அந்த 13 பேரையும் எதிர்த்து களத்தில் நின்ற சித்திக் இரண்டாவது இடத்திற்கு வந்தார். அதிகார பலம் மற்றும் பண பலத்தால் ஆதிமுக அருணாசலம் வெற்றி பெற்றார்.


நல்லாட்சி கொடுப்பேன் என்ற அருணா நிர்வாக திறமையின்மையால்  மிகவும் மோசமான ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார். எங்கு பார்த்தாலும் சாக்கடை,மலைபோல் குவியும் குப்பை மேடுகள், கொசுத்தொல்லை, குடி நீர் பிரச்சனை,வீட்டு வரி உயர்வு, உள்ளிட்ட பிரச்சினைகளால் அல்லல்படுகிறது  பேரூராட்சி.


களத்தில் நின்ற 13 வேட்பாளர்களில்  யாரேனும் இந்த அவல நிலைக்கு எதிராக தீவிரமாக போராடி இருப்பார்களா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் SDPI கட்சியினரோ இந்த அவலநிலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.



எனவே அடுத்து யார் பேரூராட்சி தலைவராக அமைய வேண்டும் என்பதற்காக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் கருத்து கணிப்பை நடத்துகிறது. கருத்து கணிப்பை நடத்துவது மட்டுமல்லாமல் களம் அமைக்கவும் தயாராக இருக்கிறது.



உங்களின் கருத்துக்களை முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் என்ற FACEBOOK மூலமாகவோ அல்லது  public.mttexpress@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம். உங்களின் கருத்துக்கள் அனைத்தும் நமது இணையதளத்தில் வெளியிடப்படும் .



பெரும்பான்மை மக்கள் யாரூக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களோ அவர்கள் தான் முத்துபேட்டை பேரூராட்சி  தலைவர் பொறுப்புக்கு தகுதியானவர் என்று எக்ஸ்பிரஸ் தீர்மானிக்கும் செய்திகள் வெளியிடும்.



குறிப்பு :அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தலை சிறந்த  ஐ .ஏ .எஸ். அதிகாரிகளான  வே. இறையன்பு ஐ .ஏ .எஸ்  ப. சிவகாமி ஐ .ஏ .எஸ் மற்றும் உமாசங்கர் ஐ .ஏ .எஸ்  ஆகிய அதிகாரிகளை முத்துபேட்டைக்கே அழைத்து வந்து நிர்வாக திறன் மற்றும் ஆளுமை திறன் ஆகிய பயிற்சிகள் கொடுக்க முழு முயற்சி எடுக்கும்  என்பதனையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.




இப்படிக்கு: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)