முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பீகாரில் மண்ணை கவ்விய மதவாத சக்திகள் -இந்தியா முழுவதும் மண்ணை கவ்வ வைக்க முடியுமா ?

மக்களவைத் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடநத 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்றுவாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பா.ஜனதா 7 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் ஒரு

தொகுதியிலும் வென்றது. குறிப்பாக பீகாரில் தேர்தல் நடைபெற்ற 10 தொகுதிகளில் 4 இடங்களை மட்டுமே பா.ஜனதா பிடித்தது. 6 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி வசம் வந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளையும் பா.ஜனதா இழந்தது. இவற்றில் 3 தொகுதிகள் ஏற்கனவே அக்கட்சி வசம் இருந்தவை. இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

தங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி குறித்து நிதிஷ் குமார் கூறுகையில், “நரேந்திர மோடி அரசு மீது வாக்காளர்களுக்கு உள்ள அதிருப்திய இந்த வெற்றி காட்டுகிறது. பா.ஜனதாவின் வகுப்புவாத செயல்பாடுகளை தடுக்க இந்த கூட்டணியில் இடதுசாரிகளையும் சேர்க்க வேண்டும்” என்றார்.

பீகாரில் லாலுவும் நித்திசும் இனைந்து வெற்றி பெற்று இருப்பது இந்தியா முழுவதிலும் உள்ள மதசார்பற்ற சக்திகளுக்கு ஒரு புதிய தெம்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இதே போல் மாநிலத்தில் எதிரும் புதிருமாக பிரிந்து சிதறிக்கிடக்கும் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்தால் இந்தியாவையே பீகார் ஆக்கலாம் என்பதுதான் நிதரனமான உண்மை .

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)