முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அந்நியன் -இந்தியன் பாணியில் 5 பேரை கொலை செய்த சாமியார் !!!

கண்ணன் அளித்துள்ள பகீர் வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:– 
ஸ்ரீரங்கம், டிசம்பர் 01: நான் ஸ்ரீரங்கம் பாரதி நகரில் வசித்து வருகிறேன். ஜோதிடம் பார்ப்பது, பரிகார பூஜைகள் செய்வது எனது தொழில். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வைர வியாபாரி செய்து வந்த திருவானைக்காவல் தங்கவேலு தனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் மீண்டும் தொழில் லாபகரமாக நடக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்டு என்னிடம் வந்தார்.

யமுனாவின் மீதான மோகத்தால் 5 பேரையும் கொன்றேன்: சாமியார் கண்ணன் வாக்குமூலம்
நான் தங்கவேலுவின் வீட்டிற்கு பரிகாரபூஜை செய்வதற்காக சென்றேன். அப்போதுதான் தங்க வேலுவின் மனைவி யமுனாவை முதன் முதலில் பார்த்தேன். பார்த்தது முதல் அவள் மீது எனக்கு ஆசை பிறந்தது. இதனால் அடிக்கடி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறி தங்கவேலு வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன். பின்னர் தங்கவேலு வீட்டில் இல்லாத போதும் அங்கு செல்வேன். சில நாட்களிலேயே யமுனாவை என் வலையில் வீழ்த்தினேன். அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தோம். இந்த விஷயம் தங்கவேலுவிற்கு தெரிந்து விட்டது. அவர் கடும் கோபத்தில் யமுனாவை திட்டினார். என்னை இனி வீட்டுக்கு வராதே என்று சொன்னார். இதனால் தங்கவேலுவை கொன்றால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என யமுனாவிடம் கூறினேன். 

யமுனாவும் அதற்கு சம்மதித்தாள். தங்கவேலுவை மது குடிக்க அழைத்து சென்றேன். அதிகமாக மது குடிக்க வைத்து பின் அவரின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தும் கழுத்தை அறுத்தும் கொன்றேன். உடலை சாக்கு மூட்டையில் கட்டி காட்டுப் பகுதியில் புதருக்குள் வீசினேன். இது 2006ம் ஆண்டு நடந்தது. 

செல்வக்குமாரும் சிறு வயது என்பதால் இது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. ‘அப்பா எங்கே’? என கேட்ட அவர்களிடம், வியாபார விஷயமாக வெளிநாடு சென்று விட்டார் என கூறி யமுனா சமாளித்தாள். இதை உறவினர்களிடமும் கூறி நம்பவைத்தாள். 

இந்நிலையில் திருச்சி கிராப்பட்டி, அன்பு நகரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் தங்கவேலு கடன் வாங்கி இருந்தார். தங்கவேலுவை நாங்கள் கொலை செய்துவிட்டதால் அவரை தேடி துரைராஜ் யமுனாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது தங்கவேலு வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக துரைராஜிடம் யமுனா கூறினார். இதனால் கணவர் இல்லமால் தனியாக யமுனா இருப்பதை தெரிந்து கொண்ட துரைராஜ் அடிக்கடி கடனை திருப்பி கேட்கும் சாக்கில் யமுனாவை பார்க்க வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

தங்கவேலுவை கொலை செய்தது போல் துரைராஜையும் கொலை செய்து விடுவது என யமுனாவும் நானும் தீர்மானித்தோம். கடந்த 2007–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி துரைராஜை வீட்டிற்கு வரும்படி யமுனா போன் மூலம் அழைத்தாள். துரைராஜ் தனது காரில் யமுனா வீட்டிற்கு வந்தார். அவரையும் யமுனா வீட்டில் வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொன்றேன். உடன் வந்த கார்டிரைவர் சக்திவேலுவையும் வீட்டிற்குள் நைசாக அழைத்து கம்பியால் பின் தலையில் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடல்களை வையம்பட்டிக்கு காரில் கொண்டு சென்று காரில் வைத்தே எரித்தோம் இதற்கு சரவணனையும், முத்துக்காத்தானையும் கூட்டாக சேர்த்துக் கொண்டேன். 

துரைராஜ் கொலை குறித்து என்னிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் சமர்த்தியமாக பதில் கூறி தப்பித்தேன். இதன்பின் எந்த பிரச்சனையும் இல்லாமல் எங்கள் உறவு தொடர்ந்தது. நான் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்கு யமுனா வந்து விட்டாள். 

இந்த நிலையில் தான் சத்யாவும், செல்வக்குமாரும் பெரியவர்களாகி விட்டனர். எங்களது கள்ள தொடர்பு குறித்து புரிந்து கொண்ட செல்வக்குமார் யமுனாவிடம் சண்டை போட்டான். மேலும் யமுனாவிற்கு சொந்தமான நிலத்தை ஒருவரிடம் அடகு வைத்து லட்சக் கணக்கில் பணம் வாங்கி இருந்தோம். அந்த பணம் குறித்தும் செல்வக்குமார் கணக்கு கேட்க தொடங்கினான். இதனால் அவைையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்கு யமுனாவையும் சம்மதிக்க வைத்தேன். 

கடந்த அக்டோபர் மாதம் ஒருநாள் காலையில் யமுனாவின் வீட்டிற்கு சென்றேன். சத்யா வேலைக்கு சென்று விட்டாள். செல்வக்குமார் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். யமுனாவும் அவளது தாய் சீதாலட்சுமியும் ஒரு அறையில் இருந்தார்கள். நானும் அவர்களுடன் காத்திருந்தேன். தூக்கம் கலைந்து எழுந்த செல்வக்குமார் பாத்ரூமுக்கு சென்றான். அப்போது பின்புறமாக சென்று அவன் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தேன். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அவன் கீழே விழுந்தான். கத்தியால் அவன் கழுத்தை அறுத்து கொன்றேன். 

செல்வக்குமாரை கொல்லும் வரை யமுனாவும் அவளது தாயும் அறைக்குள்ளேயே இருந்தனர். பின்னர் அவன் உடலை புலிவலம் காட்டு பகுதியில் வீசினேன். தம்பியை காணாத சத்யா அவன் எங்கே என்று கேட்டு யமுனாவிடம் தகராறு செய்ய ஆரம்பித்தாள். 

இந்த நிலையில் தான் கையில் யமுனாவின் பெயரை பச்சை குத்திய நிலையில் செல்வக்குமார் பிணமாக கிடந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. இதை பார்த்த சத்யா நாங்கள் தான் அவனை கொலை செய்தோம் என்றும் போலீசிடம் இதை சொல்லப் போவதாகவும் யமுனாவிடம் கூறினாள். சத்யாவை உயிருடன் விட்டால் நாங்கள் மாட்டிக் கொள்வோம் என்பதால் அவளையும் கொலை செய்ய முடிவு செய்தோம். 

கடந்த 15–ந் தேதி அதிகாலையில் யமுனா வீட்டிற்கு சென்றேன். செல்வக்குமாரை கொன்றது போல் பாத்ரூம் அருகில் வைத்து சத்யாவை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் கழுத்தை அறுத்தும் கொன்றேன். அவள் உடலையும் புலிவலத்தில் செல்வக்குமாரின் உடலை வீசிய இடத்தில் கொண்டு போட்டேன். இத்தனை கொலைகளையும் யமுனாவின் மீது நான் கொண்டிருந்த தீவிரமான மோகத்தால் தான் செய்ய நேர்ந்தது. 

சத்யா– செல்வக்குமார் கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்ததால் நானும், யமுனாவும் அவளின் தாய் சீதாலட்சுமியை கூட்டிக் கொண்டு ஆந்திராவிற்கு தப்பி சென்றோம். பின்னர் மீண்டும் திருச்சி வந்த போது யமுனாவையும் சீதாலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். வேறு வழியில்லாமல் நானும் சரண் அடைந்து விட்டேன். 

இவ்வாறு கண்ணன் வாக்கு மூலத்தில் கூறி உள்ளான்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)