முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம் வீடு மீது தாக்குதல்.! PFI கடும் கண்டனம்.




முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் சரியாக 8 மணிக்கு மேலே தான் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு வந்தது. அப்போது கடுமையான மழையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் இருந்தது. அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஊர்வலத்தில் வந்த ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்கள் பங்களா வாசல் அருகில் உள்ள வீட்டிற்குள்  கற்களை எறிந்துள்ளனர், இதனால் அந்த வீட்டில் உள்ள முன்வாசால் கேட்டு பெரிய சப்தத்துடன் உடைந்து காணப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A. அபூபக்கர் சித்திக் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். 

இதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த அவர், இந்தியா முழுவதிலும் இஸ்லாமியர்களிடம் கலவரத்தை தூண்டி வன்முறையை அதிகப்படுத்த வேண்டும் என்ற பெயரில் வருடா வருடம் இந்த விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம் என்றும், ஆனால் முத்துப்பேட்டையை பொருத்தவரையில் காவிக்கும்பல் கலவரத்தை தூண்டி வன்முறையை வளர்த்து சொத்துக்களை சூறையாட நினைக்கிறார்கள் என்றும், இன்று நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் முஸ்லிம் வீட்டை கல்லெறிந்து தாக்கிய ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

தகவல்:  ஜே: ஷேக் பரீத் 







முத்துப்பேட்டையில் கனமழை. மழையில் நுழைந்த பிள்ளையார், தாமதாமான ஊர்வலம்.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் மாலை 7 மணி முதல் தொடர்ந்து 20 நிமிடம் கனமழை பெய்து வருகிறது, இதனால் ஊரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் இருட்டில் மூழ்கி உள்ளது. இதானால் கலவர பிள்ளையார் மலையில் பாதிலேயே நுழைந்தும் கரைந்தும் நடு ரோட்டிலேயே கரைந்தும் செல்கிறார்.


முத்துப்பேட்டையில் இன்று தேசவிரோதிகளின் ஊர்வலம்!





முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் என்றாலே ஒரு வித பதற்றம் தொற்றிக்கொள்ளும் காரணம் காவிகளின் கலவர திட்டங்களும், காவல்துறையின் நெருக்கடிகளும்தான். ஆம் தமிழகம் முழுவதும் இந்த ஊர்வலம் நடந்துவிட்டாலும் கடைசியாகத்தான் முத்துப்பேட்டையில் நடத்த தேதி குறிப்பார்கள் காவிகளின் இராமகோபலன்,சிபிஆர்,ஹெச் ராஜா போன்ற வெறியர்கள் தலைமையில் காவிகள் குடிகாரர்களாக மாறி காவிதுணிகளை தலையில் கட்டிக்கொண்டு முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் ஊர்வலமகா வருவார்கள். அப்படி வருபவர்கள் அமைதியாகவோ அல்லது சாமிகளில் கோஷங்களையோ போட்டுச்சென்றால் அதனால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை ஆனால் இவர்கள் போடும் கோஷமா மததுவேசத்தை வெளிப்படுத்தி கலவரத்தை தூண்டுவதாக அமையும் பத்துகாசு முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு, இந்தியா இந்து நாடு ஓடு ஓடு பாகிஸ்தானுக்கு ஓடு, இந்த படை போதுமா இன்னம் கொஞ்சம் வேனுமா போன்ற கோஷங்களையும் அறுவருக்கத்தக்க செயல்களையும் செய்துகொண்டே செல்வார்கள். இடையில் சில இடங்களில் கற்களை கொண்டு முஸ்லிம் சொத்துக்கள் தாக்கப்படும். 



ஊர்வலத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே 3000 த்துக்கும் காவலர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு இறக்கப்படுவார்கள், ஐ.ஜி தலைமையில் பல மாவட்ட எஸ்.பிக்களின் கண்காணிப்பில் பல்வேறு டிஸ்பிக்களின் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்தப்படுவார்கள். மெயின் ரோட்டிற்கு வரும் அனுத்து சாலைகளும், வழிகளும் தட்டிகளை கொண்டும், கம்புகளை கொண்டும் அடைக்கப்படும். பல்வேற்று கண்காணிப்பு கேமராக்கள் சுழன்று கொண்டே இருக்கும், வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் என தயார் நிலையில் நிறுத்தப்படும். ஊர்வலத்தன்றோ அல்லது அதற்கு முன்பு நாள் மாலையோ காவல்துறையின் பிரமாண்ட ஊர்வலம் வலம் வரும். ஊர்வலத்தின் இரு பக்கமும் காவல்துறை அணிவகுத்து செல்வார்கள். இருந்தாலும் கலவரக்காரர்களை கட்டுபடுத்த முடியாது அந்தளவிற்கு அவர்களின் கூச்சலும் செயல்களும் அமைந்திருக்கும். 



இதோ அன்றைய வந்துவிட்டது இன்றுதான் 17-09-2013 மாலை 3.00 மணிக்கு ஜாம்புவனோடையிலிருந்து புறப்படும் காவிகளின் ஊர்வலம் ஜாம்புவனோடை தர்ஹா வழியாக கோரையாற்று பாலத்தை கடந்து ஆசாத்நகர் பள்ளிவாசல்,கடைத்தெருக்களை அடையும் பின்னர் அங்கிருந்து மீராஉசேன் மருத்துவமனைக்கு செல்லும் அப்போது அங்கே கோவிலூர், மருந்தங்காவெளி, காளியம்மன் கோவில் தெரு போன்ற பல பகுதிகளில் இருந்து வருகை தந்து தயாற் நிலையில் நின்றுகொண்டிருக்கும் பிள்ளையார்களின் காவிக்கூட்டம் இந்த ஊர்வலத்தோடு இணைந்துகொள்ளும் அதோடு பழைய பேரூந்து நிலையத்தை அடைந்து நியூ பஜார் வழியாக புதுப்பள்ளிவாசல், பங்களாவாசல், ஓடக்கரை, அரக்காசு அம்மா தர்ஹா, ரஹ்மத் ஸ்கூல், ரஹ்மத் பெண்கள் பள்ளிவாசல், ரஹ்மத் பள்ளிவாசல், யாகூப்சாரின் பிரிலியன்ட் ஸ்கூல் வழியாக முஸ்லிம்களின் பகுதிகளுக்குள் சென்று செம்படவான் காடு வழியாக சென்று அங்கிருந்து பாமினியாற்றில் கரைக்கப்படும். ((இதற்கு முன்பு பங்களாவாசலில் இருந்து முஸ்லிம்களின் முக்கிய பகுதிகளான பெரியக்கடைத்தெரு வழியாக முகைதீன் பள்ளிவாசல், குட்டியார் ஜூம்ஆ பள்ளிவாசல், அரபு சாகிபு பள்ளிவாசல் வழியாக சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தினர் கடுமையாக பிரச்சணைகளை உருவாக்கியதால் நீதிமன்றத்தில் உத்தரவுப்படி மேலே கூறிய வழிகளை மாற்றிவிட்டனர்))



நேற்றய முன்தினம் முதல் முத்துப்பேட்டையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காவலர்களின் கடுமையான கட்டுபாடுகள் முஸ்லிம்களை மன உலைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. பெரியக்கடைத்தெரு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள முஸ்லிம்கடைகளை மட்டும் குறிவைத்து உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளிகளின் முகவரிகள்,தொலைபேசி நம்பர்கள் விசாரிக்கப்பட்டு காவல்துறையால் வாங்கப்பட்டுள்ளன. ஏவனோ ஊர்வலம் நடத்துவதற்கு முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் என்று தற்போது புதிதாக கண்கானிப்பு கூண்டுகள் அமைக்கபட்டும் கண்கானிக்கபடுகின்றன. இரண்டுநாட்களாக அறிவிக்கப்படாத காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கள் முத்துப்பேட்டை கொண்டுசெல்லப்பட்டுள்ளன. 



காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிலவற்றை பாராட்டலாம் ஆனாலும் பாதுகாப்பு என்ற பெயரில் சில அத்து மீறல்களையும் நாம் கண்டிக்கிறோம். இத்தனை ரணகளங்களையும் தாண்டி, அரசுக்கு பல்லாயிரம் கணக்கில் செலவுகள் வைக்கப்பட்டும், பொதுமக்களின் அன்றாட வாழ்கைக்கு சவால் விடபட்டும், சில அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டும், பொதுமக்களின் கலவர பயத்திற்கு நடுவிலும் நடைபெறும் இந்த காவிகளின் ஊர்வலம் தேவைதானா... அரசோ அல்லது கவால்துறையோ இதனை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தாமல் ஏன் இவ்வளவு சிறமங்கள் எடுக்க வேண்டும். 



இன்று 17-09-2013 இன்னும் சற்று நேரத்தில் துவங்கி வர இருக்கும் காவிகளின் ஊர்வலம் மூலம் எந்த பதற்ற சூழ்நிலைகளும் உருவாகிவிடாமல் இருக்க அனைத்து தரப்பும் அமைதிகாக்க வேண்டும் எனவும் அன்பு வேண்டுகோள் வைக்கிறோம். நாய்கள் ரோட்டில் கற்றிக்கொண்டு சென்றாலும் அதனை காவல்துறை பார்த்துக்கொள்ளும் என்று முஸ்லிம்களும் மவுனம் காப்பதே சாலச்சிறந்தது. அதனையும் மீறி காவிகள் கலவரங்களை தூண்டினால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாரான நிலையிலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். 



இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற கலவர ஊர்வலங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே முத்துப்பேட்டை அல்ல தமிழக அனத்தை தரப்பு மக்களின் வேண்டுகோள்.....



நமது நிருபர்:

முத்துப்பேட்டை முகைதீன்

மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அணியும் தொப்பி - ஸ்கார்ப் - புர்கா ஆர்டர்! பாஜக வின் நாடகம் அம்பலம் !!



State BJP president G Kishan Reddy presenting the entre pass to muslim women after inaugurating the Narendra Modi Nava Bharat Yuva Bheri off line registration at state office. |A Suresh Kumar

ராஜஸ்தான் மாநிலம் 'ஜெயய்ப்பூரில்'  நடக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்காக, 

முஸ்லிம்கள் அணியும் தொப்பி, பெண்கள் அணியும் ஸ்கார்ப் - புர்கா போன்ற ஆடைகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, ராஜஸ்தான் பாஜக தலைவரான 'வசுந்தரா ராஜே'விடம் கேட்கப்பட்டபோது, இதை ஒப்புக் கொண்ட வசுந்தரா,

ஆம்,

மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அதிகளவில் அழைக்கப்பட்டுள்ளனர்.

பேரணியில் கலந்துக் கொள்ளும் முஸ்லிம் ஆண்கள், தொப்பி அணிந்தும், பெண்கள், பர்தா அணிந்தும் வரவேண்டும் என பாஜக மேலிட ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கான "டிரஸ் கோட்" முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

'அஜ்மீர் தர்கா' ஊழியர்கள், அங்கு வரும் யாத்ரீகர்கள் என பெருமளவில் முஸ்லிம் தலைகளை பேரணியில் கலந்துக் கொள்ள செய்ய திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.

இப்படி, பெயர் தாங்கி முஸ்லிம்கள் சிலரையும்,

வேறு சிலரை, முஸ்லிம்கள் அணியும் தொப்பி, புர்கா அணிவிக்கப்பட்டு 'ஆள்மாறாட்டம்' செய்தும், கூட்டத்தை காண்பிக்கும் முயற்சியில் ராஜஸ்தான் பாஜக ஈடுபட்டுள்ளது.

இதற்காக, 8,000 தொப்பி, 12,000 புர்கா, சில ஆயிரம் ஸ்கார்ப் களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம்

'மோடியின் கூட்டத்தில் அலை மோதிய முஸ்லிம்களின் கூட்டம்'

என்ற தலைப்பில் மீடியாக்களின் விளம்பரம் பெற்று, முஸ்லிம்களும் பாஜக பக்கம் வரத்துவங்கி விட்டது போன்ற ஒரு மாயை ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளனர்.

குறிப்பு :

மோடியின் 'ஹைதராபாத்' கூட்டத்துக்காக முதலில் பதிவு செய்ததே ஒரு முஸ்லிம் பெண் தான், என ஏற்கனவே இவர்கள் செய்த பித்தலாட்டவெட்ட வெளுச்ச்சமாகி உள்ளது.

தொகுப்பு :ஜே .ஷேக்பரீத்  .



கலவரத்தை தடுக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும்: முலாயம் சிங் வீட்டை நோக்கி SDPI கட்சி மாபெரும் கண்டன பேரணி:

sdpi protest for up riot
 உத்தர பிரதேசம், செப்டம்பர் 17: உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி SDPI கட்சியின் சார்பில் இன்று(10.9.2013) டெல்லி ஜந்தர் மந்தரில் முலாயம் சிங் வீட்டை நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.
கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக்கோரியும், சுதந்திரமான விசாரணை கோரியும், வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், வகுப்புவாத அரசியலை பா.ஜ.க மற்றும் சமாஜ்வாதி பார்ட்டி நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடைபெற்றது.பேரணியாக சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்த கண்டன பேரணியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் டெல்லி பிரதேச தலைவர் வழக்கறிஞர் முஹம்மது அப்பாஸ் தலைமை தாங்கி நடத்தினார்.இதில் ஏராளனமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி  :ஜே .ஷேக்பரீத் 

முத்துப்பேட்டை: எல்லோர் முகத்திலும் கலவர தீ


முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: காரணம் இன்று நடக்க உள்ள விநாயகர் சதூர்த்தி


முத்து பேட்டை சந்திக்குமா ஏதும் அழிவை

என்ற பயத்தில் இழந்து நிற்கிறது பொலிவை

கொய்யா வளைவிலும் இன்னும் சில தெருவிலும்
அமைக்க பட்டு இருக்கிறது பாதுகாப்பு கூண்டு

வெளிய தெருவு போகமுடியல போன கேட்குறான்
முகவரியோடு அப்பன் பேரு என்னாண்டு

அன்னைகன்னாடு உழைப்பவன்

கட்டிடம் கடை தெருவில் பிழைப்பவன்

வேலை இழந்து கையில் காசு இன்றி நிற்கிறான்

பிள்ளையாரை தூக்குபவனோ பில்லர்
தூணாட்டம் நிற்குறான்

நீதியும் நியாமும் நிற்கிறது கைகட்டி

படமெடுத்து நிற்கிறது நல்ல பாம்பு ஊரை சுற்றி

அடிப்பதற்கு அல்ல..... விரட்டுவதற்கு கூட ஆள் இல்லை

காவல் துறையோ..!! பாம்பிற்கு ஆனது செல்ல பிள்ளை

வேண்டாம் என்று சொல்ல வில்லை

பவலரகம் போட்டு கொண்டு !! உடுத்திகொள் பட்டாடை

நாங்கள் சொல்வது எங்கள் நிலத்தில்
புகுந்து கொண்டு புடுங்க வராதே எங்கள் பட்டாவை

அண்ணனும் தம்பியும் அடித்து கொள்ள

பிள்ளையாரை கொண்டு வருகிறாய் பங்கலாவாசலுக்குல்ல

ஒரு நாளைக்காய் ஊரையே கட்டு பாட்டுக்குள் எடுத்து கொள்கிறது காவல் துறை

மீண்டும் அமைதி ஏற்பட ..!!! ஆரம்ப நிலை வர..!!!
ஆகிறது காலம் ஒரு மாத பிறை

எல்லோருக்கும் தெரிகிறது இது பிழை

உனக்கு தெரியாதது தான் மாபெரும் பிழை

நான்கு பள்ளி கடந்து
நான்கு மைல் நடந்து

வந்து..!!!! நீ மேலாரில் கரைக்க
ஊரார் அமைதியை அடியோடு பறிக்க

இந்த ஊர்வலம் தேவையா
சிந்தித்து பாரையா

ஒற்றுமை ஒன்றை தவிர மற்றதெல்லாம் எடுபடாது

மாறு வேஷம் போட்டு கொண்டு மகுடம் ஏற முடியாது

எனவே மாறு வேஷம் கலைப்போம்

தவறு எவன் செய்தாலும் தடுப்போம்

எந்த சமூகமும் எங்கிருந்தோ வருபவனுக்கு
ஊருக்குள் ஆட்டம் போட அனுமதி கொடுப்பது

சமாகும் இருக்கின்ற பொருளை இழப்பது

இன்று ஒருநாள் இந்த ஊர்வலம் முடியும்
நாளை மறுநாள் விடியும்

உன் முகத்தில் நானும் என்
முகத்தில் நீயும் முழிக்கணும்

அந்த ஒற்றை காரனத்திர்க்காவது ஊரின் நல தேரை
இணைந்து நாம் இழுக்கணும்

நான் உன்னை அழைப்பது ஏதோ அல்ல பயந்து

நான் உன்னை அழைப்பது நமது வருகால சமூகத்தை
நமது காலத்திலேயே வைப்போம் ஒற்றுமையாய் சேர்த்து

இல்லையேல் எனக்கு மட்டும் அல்ல
உனக்கும் சேர்த்து வரும் ஆபத்து

நம் தரப்பில் அமைதி காப்போம்
இறைவனிடம் அமைதிக்கு பிராத்திப்போம்

என இறைவனை நினைவு கூர்ந்து
நிறைவு செய்கிறேன்

''''ஏதேனும் கலவரம் வந்தால்'''?????
பொறுப்பாளர்கள் அல்ல அப்பாவிகள்..!!!!!!!!!
பொறுப்பாளர்கள் கலவரகாரர்கள் ...!!!!!!!!!
என சொல்லி விடை பெறுகிறேன்

கலவரம் ஏதும் வராமல் இருக்க
இறைவனை பிராத்திக்கிறேன்

நன்றி: பஷீர்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)