முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் உள்ள லகூனை 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த தமிழக முதல்வர் உத்தரவு...




முத்துப்பேட்டை, செப்டம்பர் 10: முத்துப்பேட்டையில் உள்ள மாங்குரோவ் சதுப்புநிலக்காடு உலக வரலாற்றில் எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. இதன் அளவு 11,885 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. முத்துப்பேட்டை கழிமுகத்தில் மாங்குரோவ் காடுகள், சிற்றோடைகள், கடற்கரைக் காயல், மணல் மேடுகள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இப்பகுதியில் வாழ்வதற்கென நூற்றுக் கணக்கான விதவிதமான வெளிநாட்டு நீர்ப்பறவைகள் வருகின்றன. அவற்றில் கிரே பெலிக்கன் பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளம்மிங்கோ (பூநாரை), டார்டர் (பாம்புத் தாரா), பிண்டெயில் டக் (ஊசி வால் வாத்து), பெயின்டட் ஸ்டாக் (செங்கால் நாரை) ஆகியவைகள் முத்துப்பேட்டையில் காணப்படும்  பறவை இனங்களாகும். குள்ளநரி, பழந்தின்னி வெளவால் ஆகிய பாலூட்டி பறவைகளும்  வாழ்கின்றன.  

மேலும் முத்துப்பேட்டை கழிமுகத்தில் உள்ள முள்ளிப்பாலம் காயல் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை காயல் ஆகும். இது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. காவேரி ஆற்றின் கிளை நதிகளான நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு, மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இந்த ஒதுக்கீட்டின் மூலம் கண்ணாடி இலைப் படகுகள் வாங்குதல், மர வீடுகள் அமைத்தல்,  வரவேற்பு மையம் கட்டுதல், காட்சி கோபுரம் அமைத்தல், அனுகுசாலை அமைத்தல்,  குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய மேற் கொள்ளப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் முத்துப்பேட்டையில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

தொகுப்பு: ஜே: சேக் பரீத் 




பிள்ளையார் ஊர்வலம் எதற்காக?



தமிழகம், செப்டம்பர் 10: பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் மத்தியில் புகுத்தியது (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) பரஞ்சோதி என்ற பார்ப்பன தளகர்த்தன் ஆவார். (பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் பிறந்தது எப்படியோ? என்ற பல்கலைக் கழகப் பாட நூலில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது). 
 இங்கே பரவிய - பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக பிள்ளையார் வழிபாடு, விநாயகர் சதுர்த்தி - ஏதோ ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் முதல் 5 ரூபாய் பிள்ளையார்வரை களி மண்ணால் செய்யப்படுவதை வாங்கி வீட்டில் வழிபட்டு, ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போடுவது வழமை.

அண்மைக்காலங்களில் - வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகள் தாங்கள் பெறும் பெரும் பணத் திற்காக, வட முதலாளிகள் உதவியால் தமிழ்நாட்டில், மும்பை யைப் போலவே, 10 அடி, 15 அடி ராட்சசப் பிள்ளையார் என்று வேடிக்கை - விநோத உருவங்களைச் செய்து, ரசாயனக் கலவை கள் - வண்ணங்களைப் பூசி, அப்பாவி ஏழை எளிய அடித்தட்டு வறுமையாளர்களான மக்களுக்கு கைநிறையப் பணம் கொடுத்து, அவர்களும் பக்தி - போதை - இரண்டுக்கும் ஆளாகி, பெரும் பிரச்சினைகளை உருவாக்கி, கடலில் - ஆற்றில் கரைக்கும் வகையில், இந்து மதப் பண்டிகைகளால் தங்கள் கட்சிகளை வளர்த்து, மதவெறியைக் கிளப்பிடும் அருமையான, எளிமையான வழியாக ஆக்கி குளிர்காய்கின்றனர்!

வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் பள்ளி வாசல் வழியே செல்வது, சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பது போன்ற அடா வடித்தனத்தில் ஈடுபட்டு, அரசுகளுக்கு மிகப்பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திடுவதை ஆண்டு தவறாத வாடிக்கையாக்கி வேடிக்கை காட்டுகின்றனர்

வாக்கு வங்கிகளுக்கு அஞ்சி - பல அரசுகள் இது ஏற்படுத் தும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையையோ, மாசு கட்டுப்பாட்டினைப் பற்றியோ கவலைப்படாது, சுற்றுச் சூழலைக் கெடுக்க பிள்ளை யாரைக் கரைக்கும் விசர்ஜன வேடிக்கைக் கூத்தினைத் தடுக்காமல், மயிலே, மயிலே இறகு போடு! என்கின்றனர்!

உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பல தெளிவாகவே, கடலில் - ஆற்றில் இரசாயனக் கலவைப் பிள்ளையார்களைக் கரைத்து மாசுபடுத்தக் கூடாது என்று தீர்ப்புகள் - சட்டப்படி தடுக்க வாய்ப் பினை அள்ளித்தரும் வகையில் இருந்தும் கைபிசைந்து வேடிக்கை பார்க்கின்ற பரிதாப நிலையே நீடிக்கிறது!

மாசு கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி - வேண்டுகோள்தான் விடுக்கிறார். அவர் சட்டப்படி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாமே!

முன்பு தமிழ்நாட்டில் இருந்ததுபோல, சிறுசிறு பிள்ளையார் பொம்மைகளை வாங்கி வைத்து உங்கள் பிள்ளை விளையாட்டை, பக்தித் திருவிழாவான சதுர்த்தியைக் கொண்டாடலாமே தவிர, பொதுமக்களுக்கு இடையூறு, பொதுச்சொத்து நாசம், பொது அமைதிக்குக் கேடு - மத நல்லிணக்கத்திற்கு மாசு - இவைகள் கூடாது என அரசு கூறி அதைத் தடுக்க முன்வரவேண்டும்.

                                              



நீதிமன்றங்கள் ஆணையிட முடியும். அதனைச் செயல்படுத் தித் தடுப்பது அரசு அதிகாரிகள் - காவல்துறை அதிகாரிகள் - மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கையில்தான் உள்ளது. எனவே, பெரிய பெரிய கிரேன்கள், பல்லாயிரக்கணக்கில் காவல்துறைக் குவிப்பு இதனை மிச்சப்படுத்தலாமே!

எனவே, வருமுன்னர்க் காப்பது இத்துறையிலும் அவசியம்.

மத உணர்வு புண்படுகிறது என்பதைவிட, மதவெறியை மக்களிடையே பரப்புவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர வேண்டாமா? நடவடிக்கை தேவை! தேவை!!

எடையூரில் விநாயகர் சிலைகள் பறிமுதல் 24 பா.ஜ.,வினர் அதிரடி கைது...



முத்துப்பேட்டை, செப்டம்பர் 10:  பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்ற, 23 விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீஸார், பாரதிய ஜனதா மாநில செயலாளர் உள்பட, 24 பேரை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை ஊர்வலம், 17ம் தேதி நடக்கிறது. அதற்கு பிரதிஷ்டை செய்வதற்காக நேற்று மாலை, 23 விநாயகர் சிலைகளை பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்து வந்தனர்.

அப்போது, எடையூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே, டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீஸார் அவர்களை வழி மறித்து, "கடந்த ஆண்டு, 16 சிலைகள் மட்டுமே வைக்க அனுமதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் சிலைகள் வைக்க அனுமதிக்க முடியாது' எனக்கூறி, சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இதை கண்டித்து, பாரதிய ஜனதா மாநில செயலாளர் முருகானந்தம், பொறுப்பாளர்கள் ராமலிங்கம் உள்பட பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., மகேஷ்குமார் காளிராஜ் உத்தரவின்படி, முருகானந்தம் உள்பட, 24 பேரை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்த சிலைகள், எடையூர் ராம மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கண்ணை மறைக்கும் காவிப்புழுதி - ஆர்எஸ்எஸ் -இன் பொய்யும் புரட்டும் !!












முத்துப்பேட்டை, செப்டம்பர் 10: மசூதிக்கு முன்னால் மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மதவெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம்.

”நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக் கருவிகளுடனும் பாட்டுக்களுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகச் கடுங்கோபம் கொள்கின்றனர். இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு மௌனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?”
ஆர்.எஸ்.எஸ்.-இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், ‘ஞானகங்கை‘ இரண்டாம் பாகம் –பக்.170.
மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.
முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்து போக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
அதேசமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை. 1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.
பம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும். பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.
மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று.


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)