முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு, இஸ்லாமிய தலைவர்களுக்கும் வழங்க வேண்டும்..


தமிழகம், ஜூலை 24: கடந்த வெள்ளியன்று பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் இந்து அமைப்பினர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று  கூறி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று பாஜக, ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து இயக்க அலுவலகங்களுக்கும், இந்து அமைப்பை சார்ந்த நிர்வாகிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்கியது.

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்  , மற்றும் இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்கியது .வன்முறையே கொள்கை, வன்முறையே தீர்வு என்று வீதியெங்கும் முழங்கும் இவர்களுக்கெல்லாம்  துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுத்திருப்பது மிகவும் வியப்பாக உள்ளது .

இதேபோல் தமுமுக, SDPI, தவ்ஹீத் ஜமாஅத், INTJ, PFI, முஸ்லிம் லீக்,உள்ளிட்ட அணைத்து இஸ்லாமிய இயக்க அலுவலகங்களுக்கும் ,நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் அரசின் தலையாய கடமையாகும் .

 தமுமுக வை சேர்ந்த மாநில செயலாளர் திருநெல்வேலி மைதீன் சேட்கான், தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த முன்னாள் மாநில செயலாளர் முத்துப்பேட்டை அன்சாரி, SDPI கட்சியை சார்ந்த மாநில செயலாளர் முத்துபேட்டை  அபூபக்கர் சித்திக் உள்ளிட்டோருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் .

தமுமுக வை சேர்ந்த மைதீன் சேட்கான் அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு டெல்லி பேரணி தொடர்பான பணிகளில் ஈடுப்பட்ட பொது ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி போன்ற பயங்கர வாத அமைப்பினரால் கொலை வெறி தாக்குதல் நடத்தபட்டு அல்லாவின் பேருதவியால் மீண்டெழுந்தார் .

அதேபோல் கடந்த 1999 ஆம் ஆண்டு  முத்துப்பேட்டையை சேர்ந்த அன்சாரி அவர்களின்  கடை பயங்கர வாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது. அதே போல் SDPI கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் முத்துப்பேட்டை அபூபக்கர் சித்திக் அவர்களை கடந்த சில வருடங்களுக்கு முன் பழைய பேரூந்து நிலையம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல்  அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சில தேச விரோத சக்திகள் இவரை சுற்றி வளைத்து  தாக்க முயற்சித்தனர் .

ஆகவே இவர்களுக்கும் பாதுகாப்பளித்து இவர்களை காக்க வேண்டியதும் அரசின் கட்டாய கடமையாகும் .

போலீஸ் பாதுகாப்பில் கீழ்கண்ட பிரிவுகள் :

ஏ -பிரிவு பாதுகாப்பு =24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பி -பிரிவு பாதுகாப்பு = வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மட்டும் பாதுகாப்பு

கீழ்கண்ட தலைவர்களுக்கு கீழ்கண்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் :

1.குணங்குடி ஹனீபா -தமுமுக  (ஏ பிரிவு பாதுகாப்பு )

2.தடா அப்துல் ரஹீம் -இந்திய தேசிய லீக்  (ஏ பிரிவு பாதுகாப்பு )

3.பி .ஜைனுலாபிதீன் -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ஏ பிரிவு பாதுகாப்பு )

4.ஜவாஹிருல்லாஹ் -மனிதநேய மக்கள் கட்சி (ஏ பிரிவு பாதுகாப்பு )

5.எஸ் .எம்  .பாக்கர்      -இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஏ பிரிவு பாதுகாப்பு )

6.தெஹ்லான் பாகவி  -SDPI கட்சி (ஏ பிரிவு பாதுகாப்பு )

7.ஹைதர் அலி              - தமுமுக (ஏ பிரிவு பாதுகாப்பு )

8.தமீமுன் அன்சாரி      -மனிதநேய மக்கள் கட்சி (ஏ பிரிவு பாதுகாப்பு )

9.கோவை செய்யது      -தமுமுக (ஏ பிரிவு பாதுகாப்பு )

10.குலாம் முஹம்மது -வைகறை (ஏ பிரிவு பாதுகாப்பு )

11.ஏ.எஸ் .இஸ்மாயில் -பாப்புலர் பிரண்ட் (ஏ பிரிவு பாதுகாப்பு )


தொகுப்பு :  ஜே:ஷேக்பரீத்
                       (MA .Journalism & Mass Communication )
                       Member Tamilnadu Press Club
                       Chennai .

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)