முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை ஏழை மக்களின் நிலைகளும் பணக்கார முதலைகளின் சூழ்ச்சியும் ஓர் பார்வை.


முத்துப்பேட்டை, பிப்ரவரி 14: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பேட்டை நகரம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், தலித் என பழங்குடி இன மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இதில் மொத்த மக்கள் தொகை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். 

இதில் தனியார் கல்விக்கூடம் 4, அரசு ஆண்கள் கல்விக்கூடம் மற்றும் பெண்கள் கல்விக்கூடம் 4 என கல்வி கலாச்சாரத்தில் தமிழகத்திலேயே முதன்மை நகரமாக விளங்கி வருகிறது. இதில் பள்ளிவாசல்கள், கோயில்கள், சர்சுகள் உள்ளிட்ட ஆன்மீக கலாச்சாரத்தில் முதன்மை இடத்தை பெற்று அனைத்து மதத்தவரும் சகோதரத்துவ வாஞ்சையோடுதான்  வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இந்த நகரில் 80 சதவீதத்திற்கும் மேல் முஸ்லிம்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது முன்னோர்கள் கல்வி அறிவு இல்லாமலும், பகுத்தறிவு இல்லாமலும் வாழ்ந்து மரணித்தார்கள். இவர்களின் பொடு போக்கான இந்த வாழ்க்கை மற்றும் கேலித்தனமான பழக்கம் மது, மாது, சூது ஆகியவைகளுக்கு அடிமைகளாக மாறி தங்களுடைய சொத்துக்களை விற்றுத்தீர்தனர். அப்போது இவர்களுக்கு தெரியவில்லை வரக்கூடிய தங்களின் சந்ததிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்று.? 

நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பின்பற்றி நடந்த அவர்களின் தலைமுறையினர் இன்று மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருவதை நாம் கண்ணெதிரே காணமுடிகிறது. இந்த நிலை அடியோடு மாற்றப்பட வேண்டும். இதற்க்கு இளைய சமுதாயமாகிய நாம் தாம் கல்வி, பகுத்தறிவு, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் முதன்மை நிலையை அடைய பாடுபட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக நமதூர் மாணவர்கள் கல்வியை நோக்கி பயணிக்கிறார்கள். 

இன்னும் பல்வேறு மாணவர்கள் சாதித்தும், சாதிக்கவும்  துடிக்கிறார்கள். இந்த நிலையில் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த எத்துணையோ மாணவர்கள் தங்களின் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயின்று அதிக மதிப்பெண்களை (முதலிடத்தை) பெற்ற எத்துனையோ மாணவர்கள் மேற்படிப்பிற்கு செல்ல முடியாமல் மனம் உடைந்து சாதாரண 2000 முதல் 2500 ரூபாய் மாத சம்பளத்திற்கு கூலி வேலை செய்யக்கூட காத்துக்கிடக்கும் இந்த இளைய சமுதாய மாணவர்களின் எதிர்காலம் தான் என்ன.?


மேலும் இந்த ஊரில் தான் அதிகமான பணம் வசதி படைத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருந்தும் கூட இந்த ஏழ்மையான மாணவர்களின் நிலை இன்று வரைக்கும் வெறும் கேள்விக் குறியாகத்தான் இருந்து வருகிறது. 

மேலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்றாவது தங்களுடய பிள்ளைகளை மேற்படிப்பிற்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணி தங்களுடைய வீடுகள் மற்றும் நிலங்களை விற்க முன் வருகிறார்கள். இந்த சூழ் நிலையை எதிர் பார்த்து கிடக்கும் எத்துணையோ நமது பணக்கார முதலைகள் அந்த ஏழை வீடுகள் மற்றும் நிலங்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்று எண்ணி அவர்களிடம் பணத்தாசையை காட்டி கூடுதல் பணம் கொடுத்து அந்த நிலம் மற்றும் வீடுகளை தன் வசப்படுத்துகிரார்கள். 

மேலும் இவர்கள் வாங்கிய சொத்துகளை எந்த பயன்பாட்டிற்கும் உபயோகிக்காமல் வெறும் கிடப்பில் போட்டு விடுகிறார்கள். மேலும் வாங்கிய சொத்துகளை கிடப்பில் போட்டு சுமார் 5  வருடம் அல்லது 6 வருடம் கழித்து அவற்றை 10 மடங்கு இலாபத்திற்கு விற்கிறார்கள். 

ஆனால் அந்த சொத்துகளை விற்ற ஏழ்மை குடும்பத்தை சார்ந்த மக்கள் தங்க இடம் இல்லாமல் வேறு ஊர்களுக்கு செல்வதும், அல்லது நமது ஊரிலேயே வாடகை வீடுகளில் தங்கியும் தங்களுடைய வாழ்கையை சிரமத்திலேயே கழித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணக்கார முதலைகள் அனைத்து ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்களின் சொத்துக்களையும் தன் வசப்படுத்தி இந்த முத்துப்பேட்டை நகரை தன்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற மாபெரும் இலட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். 

இது போன்றவர்களின் செயல்பாடுகளுக்கு முற்று புள்ளி வைக்க இளையசமுதாயம் தயாராகி வருகிறது. இது குறித்து நமது அடுத்த கட்டுரையில் காண்போம் இன்ஷா அல்லாஹ்...

தொடரும் எக்ஸ்பிரஸின் வேட்டை...

தொகுப்பு:


A. முஹம்மது இலியாஸ், MBA., MA. (Journalism & Mass Communication ) 






தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)