முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ரவுடிகளின் தலைவர் முத்துப்பேட்டை ஆய்வாளர் வி.சி.உ.விரதத்தில் மா.து.செ. கடும் தாக்கு



முத்துபேட்டை, செப்டம்பர் 07 : முத்துபேட்டையில் ஜாம்புவோனோடை ஊராட்சி உறுப்பினர் பாலமுருகன் தாக்கப்பட்ட சம்பவத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதப்படுத்தப்பட்ட அவரது வீட்டின் மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 4 இடங்களில் தொடர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மலும் இந்த பிரச்சனையில் ஒரு தலைப் பட்சமாக செயல்படும் இன்ஸ்பெக்டர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தாக்குதலுக்கு பயன் படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் உண்ணா விரதம் நடைபெற்றது. இக்கட்சியின் ஒன்றிய செயலர் வெற்றி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செல்வர்கள் பாவேந்தன், செல்வன், இளைஞர் அணி செயலர் தம்பி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணா விரதத்தை துவக்கி வைத்து பேசிய மாநிலத் துணைச் செயலர் இளந் தென்றல் அவர்கள், ஜாம்புவோனோடையில் ஒரு மக்கள் பிரதிநிதியை பத்துவாகனங்களில் பத்துக்கும் மேற்பட்ட ரவுடியால் வெட்டி சாய்க்கப்பட்டது. ஆனால் பெயரளவில் மட்டும் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், இது மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்றும், இதற்க்கு முத்துபேட்டை காவல் ஆய்வாளர் துணை, ரவுடிகளின் தலைவராக செயல்படுகிறார் என்றும், ஆட்சியாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பதவி பிரமாணம் எடுக்கும் போது எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதி மொழியை கடைபிடிக்க தவறினால் அது மிகப்பெரிய குற்றம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதற்கு சரியான தீர்வை எடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் மாநிலம் மற்றும் மாவட்டம் அளவில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். இதில் SDPI மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், இ.கம்யூ. ஒன்றிய செயலாளர் முருகையன், உழவர் இயக்க மாநில துணைச் செயலர் இடிமுரசு, மாவட்ட துணைச் செயலர் முருகையன், அரசியல் குழு செயலர் குனவிழகன், நகர துணைச் செயலர் கருணாநிதி உள்பட பலரும் பேசினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)