முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பேரூராட்சி விவசாய நிலத்தை அபகரிக்க முடிவு, தமிழக முதல்வருக்கு கோரிக்கை.


முத்துபேட்டை, ஆகஸ்ட் 09 : முத்துப்பேட்டை தெற்குக்காடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி உள்ள தனது கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

முத்துப்பேட்டை தெற்குக்காடு புல எண் 102 - 9 ல் உள்ள மானாவரி நிலமானது 1980 ஆம் ஆண்டு எனது பெயரில் பதிவு செய்ப்பட்ட நஞ்சை நிலத்தினை சாகுபடி செய்து வருகிறேன். அரசுக்கு செலுத்த வேண்டிய வாயிதாக்கலையும், இன்றுவரை செலுத்தி வருகிறேன். தற்போது முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தால் திட கழிவு மற்றும் பாதாள சாக்கடை அமைக்க எனது நிலம் கையகப்படுத்தப்பட போவதாக நிறைவேற்றப்பட போவதாக தகவல் அறிய பெற்றேன்.

இந்த சம்பவம் எங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தி உள்ளது. அம்மா அவர்களே மேற்படி பேரூராட்சி நிர்வாகம் சரியாக ஆய்வு செய்யாமல் குறிப்பாக எனது நிலத்தை கையகப்படுத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். அம்மா... ஏற்கனவே நான் எனது பட்டா நிலத்தில் E.C.R. ரோட்டுக்கு இடம் கொடுத்துள்ளேன். மீண்டும் பேரூராட்சி நிர்வாகம் எனது நிலத்தை கையகப் படுத்தினால் நான் முற்றிலுமாக பாதிக்கப் படுவேன்.

சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்கள் எனது விலை நிலத்தின் அருகே ஏராளமாக உள்ளன. இது பேரூராட்சி நிர்வாகத்தினருக்கும் நன்றாகவே தெரியும். இதை விடுத்து குறிப்பாக எனது விலை நிலத்தை மட்டும் கையகப்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயமாகும். அரசு ஆணை குறிப்பில் சாகுபடி செய்யப்படாத நிலங்கள் அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற உத்தரவு பிரப்பிக்கப்பட்டுலத்தை நான் அறிவேன். எனவே அம்மா அவர்கள் சம்மந்தப்பட்ட வருவாய்த்துறை மட்டும் பேரூராட்சி நிர்வாகத்துறை அலுவலர்களுக்கு எனது விலை நிலத்தை ஆக்கிரப்பிப்பு செய்யாதவாறு உரிய உத்தரவிட்டு தீர்மானத்தை ரத்து செய்யவும், உரிய ஆவணம் செய்யும்படி பணிவுடன் வேண்டுகிறேன். மேலும் எனது விலை நிலம் பள்ளப் பகுதியாகும். பேரூராட்சி நிவாகம் ஏற்படுத்தும் எந்த திட்டங்களும் வீணாகும், "இந்த திட்டத்தின் கீழ் எங்களது விலை நிலத்தை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும்" இவ்வாறு தனது மனுவில் கூறி உள்ளார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)