முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் மதீனா பள்ளிவாசல்!!!











முத்துப்பேட்டை, ஜனவரி 06 : முத்துப்பேட்டை கிட்டங்கித் தெருவில் உள்ள மதினாப்பள்ளி வாசல் எதிரில் குப்பை கூலங்களும், அசுத்தங்களும் நிரம்பிக் கிடக்கின்றது. இதில் மிக முக்கியமாக கோழிக்கடைகளில் உள்ள கோழியின் கழிவுகளை கொட்டுவதிலும், பொதுமக்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதும் இங்கு வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில் பன்றிகள் இங்கு அதிக அளவில் அசுத்தம் செய்து வருகிறது. இதில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் காரணமாக பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களுக்கு மிகவும் இடையூறாக இருந்து வருகிறது. மேலும் இந்த சுகாதார சீர்கேடுகளால் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கும் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அப்பள்ளி முஹல்லா வாசிகளிடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர்கள், இதுகுறித்து எங்க பள்ளிவாசல் முஹல்லா சார்பில் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்த ஓர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்கள், இந்த நிலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கா? அல்லது அதிகார வர்கத்தின் சூழ்ச்சியா? என்பது இந்த முஹல்லா வாசிகளின் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மேலும் கவுன்சிலர்கள் பதவிக்கு வருமுன் நாங்கள் சுகாதாரத்தை பேணிக்காப்போம் என்று தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். அவ்வாறு வெற்றிபெற்றவர்கள் இப்போது எங்கே சென்றுள்ளார்கள்? இதனால் கிட்டங்கித்தெருவில் உள்ள மதினாப் பள்ளி வாசல் எதிரே உள்ள இடங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை சுத்தம் செய்து பொதுமக்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவார்களா???
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா, யூசுப் அலி

பிற்ப்படுத்தப்பட்ட மாணவர்களும், எதிர்கொள்ளும் சவால்களும் ஓர் பார்வை:


முத்துப்பேட்டை, ஜனவரி 05 : ஒரு நாட்டின் மிகப்பெரிய சக்தி என்றால் அது மாணவ சக்தி என்பதை அனைவரும் அறிந்ததே! நாட்டின் அரசியல் சூழ்நிலைகளில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு திறமை கொண்ட மாணவர்கள் இந்தியாவில் வாழ்வது மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்:
இந்தியாவில் நடக்கும் தற்போதைய சூழ்நிலைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நமது நாடு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுதும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் கொடுமைப்படுத்துவது நிறுத்தப்படவில்லை. அரசியல் தந்திரங்கள், அடக்கு முறைகள், ஒடுக்கு முறைகள், ஊழல் போன்ற சாதாரணமான அரசியலுக்கு நடுவே நேர்மையையும், நீதியையும், சுதந்திரத்தையும், அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழும் சிந்தனை எழுச்சியே மாணவர்களின் இயல்பான குணம் ஆகும். உலகின் எந்த ஒரு நாட்டின் வரலாற்று நெடிகிலும் மாணவர்களின் புரட்சி இன்று வரலாற்றை எழுதி விட முடியாது. இப்படிப்பட்ட இயல்பான குணங்களை கொண்ட மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்துகிற வகையில் சங்பரிவார இயக்கங்கள் உயர் ஜாதி மாணவர்களிடம் மதவாத தீவிர சக்திகள் உணர்வை ஏற்படுத்தி, பிற்படுத்தப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக தூண்டி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் இந்திய ஆட்சியிலும், அதிகார வர்கத்திலும் முழுவதுமாக மதவாத தீவிர சக்திகள் அமர்ந்து கொண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீது தாக்குதல்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் கல்வியிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மதவாத தீவிர சக்திகளின் நோக்கமே பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வளர்சியடையக்கூடது என்பது தான் இவர்களின் நோக்கம். இவ்வாறே பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை பெரிதும் அவல நிலையாக உள்ளது.
எதிர்கொள்ளும் சவால்கள்:
ஆகா இன்றைய உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல்,தனியார்மயமாக்கள் என்று இந்தியா தனது வணிக தொடர்பை விரிவு படுத்தி உலக அளவில் போட்டி போடும் நிலையில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டிய அரசும், அதிகாரிகளுமே சிறுபான்மை இன மாணவர்களுக்கு துரோகம் செய்யும் போது அதை எதிர்கொள்வதே மாணவர்களுக்கு ஓர் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
நாம் என்ன செய்ய வேண்டும்?:
இந்த நாட்டில் அரசியல் வாதிகளை விடவும், ஆட்சியாலர்களைவிடவும் பொறுப்புள்ள ஓர் சமூகம் என்றால் அது மாணவச் சமூகம்தான். ஆட்சியாளர்களாலும், அதிகார வர்காத்தாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் நாட்டின் கொள்கைகளும், சட்டங்களும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவும் பாமர மக்களுக்கு விரோத கொள்கையாகவும் இருந்து வருகின்றது. மாணவ சமூகமே! அநீதிகளையும், அடக்குமுறைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையை கலைத்து விட்டு இந்த இந்திய சமூகம் அமைதியுடனும், சுதந்திரத்துடனும், நீதிடனும் வாழ வேண்டுமாயின் நாம் களத்தில் இறங்க வேண்டும். மதவாத தீவிர சக்திகள் சூழ்ந்துள்ள இந்திய ஆச்சியிலும், அதிகாரத்திலும் நாம் அமர வேண்டும். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துமையாமை இயக்கம் நடத்தி போராட்டம் செய்த வரலாற்றிலே அதிக பங்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உண்டு.ஆம் ஆகையால் மாணவர்களே நாம் மீண்டும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்தும் காலம் நெருங்கி விட்டது மதவாத தீவிர சக்திகளின் கோரப்பிடியிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டும். நாம் அதற்கு உறுதியுடன் களமிறங்க ஒருங்கிணைய வேண்டும்.
முடிவுரை:
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீதான இனவெறி தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசியல் வாதிகள் லஞ்சம், ஊழல் என உல்லாச வாழ்க்கையில் எதிர்கால இந்தியாவை சிறிது சிறிதாக தொலைத்து வருகின்றனர். இந்த அவலத்தை மாற்றி எதிர்கால இந்தியாவை அபாயத்திலிருந்து காப்பாற்றும் கடமை இன்றைய மாணவர்களுக்குத்தான் உள்ளது. எனவே நாளைய தலைவர்களாகிய நாம் தேசத்திற்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராகுவோம். பிற்படுத்தப்பட்ட மாணவ சமூகமே ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம்...
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

A .முஹம்மது தமீம் அன்சாரி
மாணவன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
முத்துப்பேட்டை.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் மலர் வெளியீடும், பிரபலங்களின் வரவேற்ப்பும்...






முத்துப்பேட்டை,ஜனவரி 05 : நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் திறப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் எக்ஸ்பிரஸ் சார்பில் வழங்கப்பட்டது. இந்த மலரை பெற்ற உடன் நல்ல முறையான வரவேற்ப்பு வந்த வண்ணம் உள்ளது. இது போன்ற சமுதாய சேவையில் முன்னிலை வகிக்கும் உங்கள் இணையதளமான முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு அனைத்து உள்ளங்களும் நல் ஆதரை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களிடம் உள்ள கல்விச் செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள் , அரசியல், உலகம், வளைகுடா, மற்றும் முத்துப்பேட்டை செய்திகளை public.mttexpress@gmail.com எங்களிடம் தாருங்கள் அவற்றை நாங்கள் உலகிற்கு தருகிறோம்.

இப்படிக்கு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்.

மவுத்து அறிவிப்பு: "SS. ஜெய்லானி"


முத்துப்பேட்டை, ஜனவரி 05 : தர்ஹா மர்ஹும் SS .சாகுல் ஹமீது அவர்களின் மகனும், தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி SS .பாக்கர் அலி சாஹிப் அவர்களின் சகோதரருமாகிய "SS. ஜெய்லானி" அவர்கள் இன்று காலை 7 :30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணியளவில் தர்ஹா பள்ளிவாசல் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
அறிவிப்பவர்

SS .பாக்கள் அலி சாஹிப்

நமது நிருபர்

வழக்கறிஞர் L .தீன் முஹம்மது

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)