முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மவுத்து அறிவிப்பு:"லே.மு.மு. முஹம்மத் ஜான்"


முத்துபேட்டை, அக்டோபர் 19 : பட்டுக்கோட்டை ரோடு மர்ஹும் LMM .முஹைதீன் பக்கீர் அவர்களின் மகனும், சின்ன கட்சி மரைக்காயர் தெரு மர்ஹும் மூ.ஆ.சே. அப்துல் காசிம் அவர்களின் மருமகனும், அந்தமான் நே. மு.மு. அப்துல் லத்திப், மர்ஹும் நே. மு.மு. ஜகபர் அலி ஆகியோரின் சகோதரரும், கமருள் ஜமால், முஹம்மத் முஹைதீன், அலி அக்கபர் ஆகியோரின் தகப்பனாரும் M .பசீர் அகமத் அவர்களின் மாமனாருமாகிய "லே.மு.மு. முஹம்மத் ஜான்" அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னாஹ் லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).அன்னாரின் ஜனாசா இன்று 20.10.2011. மாலை 4 மணியளவில் கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்.

L .S .M .முஹம்மத் யூசுப் & சகோதரர்கள்

ஆர்.எஸ்.எஸ். தனது கிளைகலை ஐ.ஐ.டி,மற்றும் ஐ.ஐ.எம்.களில் விரிவாக்க திட்டம்!!!


மும்பை,அக்டோபர் 19 : ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார தலைவர் மோகன் பகவத் தற்போது உலகில் உள்ள நவீன தொழிற்நுட்ப சவால்களை சந்திக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளாதது குறித்து தாம் கவலை தெரிவிப்பதாகவும் மேலும் சங்க பரிவார அமைப்புகளை தற்போதைய தொழிற்நுட்பத்திற்கு ஏத்த வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். எனவே ஆர்.எஸ்.எஸ்ஸை தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றும் பொறுப்பை தங்களின் கிளை அமைப்பான சேவா பாரதியிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் அதனுடைய வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை குறித்து கோரக்பூரில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பெரு நகரங்களில் தங்களுடைய அமைப்பை வேரூன்ற செய்வதற்காக முக்கிய நகரங்களுக்காக தனித்தனியே இணையத்தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் நகரங்களிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களுக்கும் விரைவில் இணையதளங்களை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்காக தனது வாழ்நாளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பிரசாரக்குகளாக பணிபுரிய இளைஞர்களை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பிரசாரக் என்றால் திருமணம் புரியாமல் வேறு எந்த பணிகளுக்கும் செல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியர்களாக பணிபுரிய வேண்டும். இதற்கு பல இளைஞர்கள் விரும்பாததால் ஆர்.எஸ்.எஸ் தற்போது தன்னுடைய செயல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இனி பிரச்சாரக்குகள் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அந்த அமைப்பிற்காக முழு நேர ஊழியர்களாக பணி புரிந்தால் போதுமானது என்றும் பிறகு அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்றும் முடிவெடுத்துள்ளது. தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் பிரசாரக்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பணிகளை தொடர சமூக சேவை அமைப்புகள் என்ற முகமூடியில் நடத்தும் கிளைகளின் மூலம் பிரசாரக்குகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,அச்ன்ஸ்.அப்துல் பாரி,EK .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை மண்ணை சாலையில் திடீர் தீ விபத்து!!!



முத்துபேட்டை,அக்டோபர் 19 : திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் மண்ணை சாலையில் வாக்கு என்னும் அருகாமையில் சின்ராஜ் என்பவரது இரும்பு கடை இருந்து வந்தது. இந்த கடையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயனைப்பு துறைக்கு தகவல் தெருவிக்கப்பட்டது அவர்கள் உடனே வந்து அத்தீயை அனைத்தனர்.அந்தகடை எரிந்து சாம்பலாயின. இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பார்,EK .முனவ்வர் கான்,AKL . அப்துல் ரஹ்மான்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)