முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு:


முத்துப்பேட்டை,அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் முத்துப்பேட்டையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர் வேட்பாளரின் பட்டியல் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளரின் இறுதி பட்டியல் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறேன். எனவே முத்துப்பேட்டை மக்கள் மற்றும் வெளி ஊரு நண்பர்கள் இதற்கு முழு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.

முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேர்தல் வாக்குறுதி! மாவட்ட SDPI கட்சி வெளியீடு:


முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் 01.10.2011 ஆம் தேதியன்று இக்கட்சியின் மாவட்ட தலைவர். தப்ரே ஆழம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில் மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பல முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப் பட்டு, பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சித்திக் மச்சன் என்கிற அ.அபூபகர் சித்திக் அவர்கள் சார்பாக தேர்தல் வாக்குறுதியாக பின் வருபவன் வற்றை செய்து கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகள்:
1 ) முத்துப்பேட்டை பேரூராட்சியில் சேரக் கூடிய மக்களின் வரிப்பனமான பொது நிதிலிருந்து இறைவன் மீது ஆணையாக ஒரு ருபாய் கூட ஊழல் செய் மாட்டோம்.
2 ) முத்துப்பேட்டை மக்களின் கனவான, முத்துப்பேட்டையை தாலுக்கவாக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசை அணுகி எல்லாவிதமான முயர்த்சிகளும் மேற்கொள்ளப் படும்.
3 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பணிகள் முடிக்கப் படாமல் உள்ள சிமென்ட் சாலைகளை உடனடியாக விரைந்து பணிகள் நடக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.
4 ) முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் உடைந்து பழுதான கழிவு நீர் வடிக்கால்களை முன்னுரிமை அடிப்படையில் சீர் செய்து பொது சுகதரத்தை பாதுகாப்போம்.
5 ) வடிக்கால் வசதியில்லாத அனைத்து வார்டுகளிலும் உடனடியாக வடிகால் வசதி அமைய நடவடிக்கை எடுப்பது.
6 ) ஆங்காங்கே சேரும் குப்பை, கூளங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிக கவனம் செலுத்துவது.
7 ) பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க, ஊர் எல்லைக்குள் பன்றிகள் இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்துவது.
8 ) பேட்டை, செம்படவான்கடு, மருதங்காவளி, தேற்குகாடு மக்களின் குடிநீர் பிரச்சனையை கவனத்தில் கொண்டு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைப்பது.
9 ) செயல் இலக்கச் செய்யப்பட பரக்கலக்கோட்டை நீரேற்று நிலையத்தை, அவசிய நேரங்களில் பயன்படுத்தும் வகையில் புதுப்பித்து செயல்பட்டு நிலைமைக்கு கொண்டு வந்து தினமும் இருமுறை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வது.
10 ) சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் நடைபெறாமல், சுகாதாரமான குடிநீர் விநியோகம் கிடைக்க ஆவண செய்வது.
11 ) இந்து. முஸ்லிம், கிருஸ்தவ, தலித் மக்களிடயே ஒற்றுமையை ஏற்படுத்தி, முத்துப்பேட்டையை அமைதி பூங்காவாக மாற்றுவோம்.
12 ) பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிப்பு முறையை (சப்ரிஜ்ஸ்டர் ஆபிசில் ஒப்படைக்கப் பட்ட பதிவேடுகளை திரும்பப் பெற்று) மக்களை அலைகளிக்காமல் மக்களுக்கான சேவையாக செய்து வருவோம்.
13 ) எந்த காரணம் கொண்டும் (வரிவித்திபு முறையிலும் மக்களுக்கான சேவைகள் கிடைப்பதிலும்) நிர்வாகத்தால் மக்களை அவத்திக்குள்ளக்கும் எவ்வித சிலையும், செய்ய அனுமதிக்க மாட்டோம்.
14 ) பேரூராட்சிக்கு வரவேண்டிய பல லட்ச ரூபாய் வாரக் கடனை வசூல் செய்து, மக்கள் மக்கள் நலத்திட்டங்களை செய்வோம்.
15 ) சொத்து வரி விதிப்பதில் ABC மண்டல பிரிப்பு முறையை அரசாணைபடி மாற்றியமைப்போம், இனி வருங்காலங்களில் எக்காரணம் கொண்டும் சொத்து வரி விதிப்பு உயர்வு செய்ய அனுமதிக்க மாட்டோம்.
16 ) அரசு ஆண்கள், மேன்கள், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர், மாணவியர், ஆசிரியர் நலன் கருதி குடிநீர், கழிவறை வசதிகளை உடனடியாக செய்து தர முழு முயற்ச்சி எடுப்போம்.
17 ) அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ள மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி செயல் பட முழு கவனம் செலுத்துவோம்.
18 ) அரசு அறிவிக்கும் அனைத்து வித நலத்திட்டங்களும் (இலவசங்கள் உள்பட) மக்களுக்கு டிரைவில் விடுபடாமல் கிடைக்க முழு கவனம் செலுத்துவோம்.
19 ) பேரூராட்சிக்கு சொந்தமான அனைத்து குளங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றி தருவோம்.

இவன்
சோசியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI)
தேர்தல் பணிக்குழு, முத்துப்பேட்டை
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், அச்ன்ஸ்.அப்துல் பாரி, ஏக.முனவ்வர் கான், அபு மர்வா (துபாய்)

முத்துப்பேட்டை ஒன்றிய குழு உறுபினருக்கு IR . ரவி போட்டி: தே.மு.தி.க. தலைமை தகவல்!!



முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தே.மு.தி.க சார்பில் போட்டியிடப் போவதாக தே.மு.தி.க. தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். மேலானம்ம குறிச்சி, பெத்தலவின் கோட்டான், கீழ நம்மங்குரிட்சி, மங்களூர், தம்பிக் கோட்டைக் கீழக்காடு, ஆகிய இடங்களில் ஆற்று ஓரமாக இருக்கக் கூடிய குடிசை வாழ் மக்களுக்கு வெல்ல நேரத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு அவற்றை சுற்றி சுவறுகள் கட்டப்படும் என்றும், மேலும் இதற்கு முறையாக நடவடிக்கை எடுக்கப் பட்டு அந்த கரைகள் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெருவித்தார். விவசாயம் செய்யக் கூடிய நபர்களுக்கு அவர்களின் தேவைகளை புரிந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அவற்றை பெறுவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றும், கிராம மக்களின் ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு கணினி மையம் அமைத்து தரப்படும் என்றும் அவர் தெய்ருவித்தர். பெத்தளக் கோட்டம், நம்மங்குறிச்சி ஆகிய இரு இடங்களுக்கு சாலைகள் சீரமைக்கப் பட்டு பேர்ந்து வசதிகளை அதிகப் படுத்த ஏற்பாடு செய்வேன் என்றும், குடிசை வாழ் மக்களுக்கு மலைகலத்தில் வீடுகளில் தண்ணீர் புகதவரு சுற்றுச் சுவர் அமைத்து தரப் படும் என்றும் அவர் தெய்ருவித்தர். பேலும் பித்தலவான் கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகதரமான களிவறியும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அப்போது அவர் தெய்ருவித்தர்.

தொகுப்பு
ரிபோர்ட்டர் இல்யாஸ், EK . முனவ்வர் கான், N .ராம்குமார் (சிங்கப்பூர்)

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு Ps . பத்மநாபன் போட்டி:தே.மு.தி.க.தகவல்!!!



முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. வின் நகரச் செயலாளர் திரு. PS. பத்மநாபன் அவர்கள் போட்டியிடப் போவதாக தே.மு.தி.க தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டை நகர மக்களுக்கு மிகவும் முக்கிய அடிப்படை வசதியான சாலை வசதி, மற்றும் நிரந்தரமான குடிநீர் வசதி இவை இரண்டையும் பெறுவதற்கு மிகவும் பாடுபடுவேன் என்றும், மேலும் முத்துப்பேட்டை நகரை சுத்தமாகவும், பசுமை நகரமாக மற்ற கடுமையாக பாடுபடுவேன் என்றும், மத நல்லிணக்க ஒற்றுமையை முத்துப்பேட்டையில் மலர நான் கடுமையாக பாடுபடுவேன் என்றும் அவர் தெருவித்தார். மருதங்காவளி, தேற்குகாடு, மேல்நிலைத் தோப்பு ஆகிய இடங்களுக்கு குடிநீர் முழுமையாக கிடைக்க பாடுபடுவேன் என்றும், தேற்குகாடு ஆரம்ப பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்றும், மேலும் கொய்யா தோப்புக்கு புதிய சாலை வசதி ஏற்பாடு செய்து அதனை தார் சாலையாக அமைத்து கொடுப்பேன் என்றும், முத்துப்பேட்டையை தாலுக்காவாக மற்ற அனைத்து வேலைகளும் நடைமுறைபடுத்த கடுமையாக முயற்சிப்பேன் என்றும், முத்துப்பேட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் அனைத்தையும் அங்கு சென்று வர ஏற்பாடு செய்வேன் என்றும் அவர் தெருவித்தார்.மேலும் அ.தி.மு.க. உடனான கூட்டணி பற்றி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து தற்போது எங்கள் கேப்டன் எந்த ஒரு பதிலும் தர வில்லை என்றும் கேப்டனின் முடிவுதான் எண்களின் முடிவு என்றும் அப்போது அவர் தெருவித்தார். முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் என்னை ஏற்று வருகிற தேர்தலில் அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செயுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
Source from Muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK . முனவ்வர் கான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)