முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளி வாசல் திறப்பு விழா காண தயாராக உள்ளது: நாள்: 28. 06. 2013. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

மவுத்து அறிவிப்பு: "ஹசன் ஹுசைன் நெய்னா மலை"


முத்துப்பேட்டை, ஜூன் 18: திமிலத் தெரு ஆட்டப்ப சந்து மர்ஹும் தே. சீனா. முஹம்மத் அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹும். பட்டாணி அப்பா என்கின்ற அஹ்மத் லப்பை மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஆசாத் நகர் தே. சீனா. நெய்னா முஹம்மத் திமிலத் தெரு மர்ஹும் ஹனிபா, தே. சீனா. சாகுல் ஹமீது, தே. சீனா. தாவூத் இபுராஹிம்,தே. சீனா. செகுராவுத்தர், தே. சீனா, ஜெகபர் அலி, இவர்களின் சகோதரரும், பங்காளி மர்ஹும் முஹைதீன் பக்கீர், முஹம்மத் ஹனிபா, சாகுல் ஹமீது இவர்களின் மச்சானும், புது பட்டினமம் பசீர் அஹ்மத், சேதுபாவா சத்திரம் ஜமால் முஹம்மது, மத்துக்கூர் அன்வர்தீன், ஆகியோரின் தகப்பனாரும், முத்துப்பேட்டை கவுன்சிலர் பாவா பகுருதீன் இவரின் மாமனாருமாகிய, " ஹசன் ஹுசைன் நெய்னா மலை அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் அரபு சாஹிப் பள்ளி வாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
 
அறிவிப்பவர் :

தே. சீனா. நெய்னா முஹம்மது

நமது நிருபர்:

பாடகர் K.M. காதர் கனி 

முத்துப்பேட்டையில் நூறு (122) வயதை தாண்டிய மூதாட்டி மரணம்...


முத்துப்பேட்டை, ஜூன் 18: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்ஹாவை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மனைவி ஆமினா அம்மாள் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்துள்ளார். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லை ஹீ ராஜிவூன்) இவருக்கு வயது 122 என்று எல்லோராலும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில ஆவணங்களை வைத்து பார்க்கும் போது வயது 100 ஐ தண்டுகிறது என்று தெருகிறது. மேலும் இவர் இதுவரை 4 தலைமுறையினரை கண்ட இந்த மூதாட்டியின்  நல்லடக்கம் தர்ஹா மையவாடியில் நல்லடக்கம் செயப்பட்டது.

தொகுப்பு  

முஹைதீன் பிச்சை 

குவைத்தில் இலங்கை பெண் கொலை: தமிழக வாலிபர்கள் 2 பேரின் தூக்கு தண்டனை நிறுத்தம்








முத்துப்பேட்டை, ஜூன் 17: முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் பட்டறைக்குளத்தை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். நீண்ட நாட்களாக குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுரேஷ். அங்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2008 - ம் ஆண்டில் குவைத்தில் இலங்கையை சேர்ந்த பாத்திமா கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுரேஷ், அவருடன் பணிபுரிந்த கும்பகோணத்தை சேர்ந்த தாஸ், இலங்கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

ஆனால் தாஸ் நான்தான் கொலை செய்தேன். சுரேசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வாக்குமூலம் அளித்தார். ஆனாலும் சுரேசை குவைத் போலீசார் விடுதலை செய்யவில்லை. வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்த்தனர். இந்த வழக்கில் சுரேஷ், தாஸ் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், நித்யாவுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து குவைத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

சண்முகசுந்தரம் பல்வேறு முயற்சி எடுத்தும் சுரேசை விடுதலை செய்ய முடியவில்லை. இதனை தொடர்ந்து சுரேசின் தாய் மல்லிகா ஜனாதிபதி, பிரதமர், முதல் - அமைச்சர் தமிழக அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோருக்கு தனது மகனை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுமாறு மனு அளித்தார். 

இந்த நிலையில் சுரேஷ், தாஸ் ஆகியோரை இன்று தூக்கில் போட குவைத் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதுதொடர்பாக அங்கு இருந்த சுரேசின் தந்தை சண்முக சுந்தரத்திற்கும் குவைத் அரசு தகவல் தெரிவித்தது. 

இதுகுறித்து நாகை தொகுதி எம்.பி. ஏ.கே.எஸ். விஜயனிடம் சுரேசின் தாய் தகவல் தெரிவித்து தனது மகனை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உடனே பிரதமர் மன்மோகன் சிங் குவைத் அரசிடம் பேசினார். 

இதனை தொடர்ந்து சுரேஷ் மற்றும் தாஸ் ஆகியோரின் தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை நிரந்தரமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேசின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசியாவில் இஸ்லாமிய கருத்தரங்கம்: பாபுலர் பிரண்ட் முஹம்மது அலி ஜின்னா பங்கேற்ப்பு.



மலேசியா, ஜூன் 15: மலேசியாவில் வருகிற 16.06.2013 ஆம் தேதி அன்று இஸ்லாத்திற்கு எதிரான சதியும், முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை மக்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் விதமாக பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். முஹம்மது அலி ஜின்னா கலந்து கொள்ள இருகிறார்கள். 

குறிப்பு: நாள், 16.06.2013, இடம்: சைட் பிஸ்ட்ரோ உணவாக அரங்கம், ஜாலான் டான் வங்கி (விலாயா காம்ப்ளக்ஸ் எதிரீல்) கோலாலம்பூர் மலேசியா. நேரம்: மாலை 8 மணிக்கு.

நன்றி : ஆசியன் நண்பன் 

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிதியுதவி


நெல்லை, ஜூன் 15: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணையின் பேரில் கைது செய்யபட்ட அப்பாவிகளின் குடும்பத்தார்களுக்கு இந்தியயூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நெல்லை வந்த பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் உதவித்தொகை வழங்கினார் . அருகில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.துராப்ஷா, மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன், மாவட்ட வர்த்தக அணி பாட்டபத்து முஹம்மது அலி ,மேலப்பாளையம் நகர தலைவர் நாகூர்கனி
நகர செயலாளர் மைதீன் அப்துல் காதர் நகர பொருளாளர் அப்துல்ஜப்பார்,தென்காசி முஹம்மத்அலி , மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தகவல் : மேலப்பாளையம் - நாசர் 

முத்துப்பேட்டை அருகே குடிசைக்குள் வேன் புகுந்து பெண் பலி!!!



முத்துப்பேட்டை, ஜூன் 10: தூத்துக்குடியில் இருந்து மீன் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு வேன் வேளாங்கண்ணி நோக்கி வந்தது. இந்த வேன் இன்று காலை 7 மணியளவில் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. 

அப்போது அந்த வேன் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள குடிசை வீட்டு முன் நின்ற 10-ம் வகுப்பு மாணவன் சபரிவாசன் மீது மோதி விட்டு நிலை தடுமாறி குடிசைக்குள் புகுந்தது. அப்போது குடிசைக்குள் இருந்த மகாலிங்கம் மனைவி பானுமதி (45), அவரது மகன் அசோகன் (20), பக்கத்து வீட்டை சேர்ந்த பிரியா மற்றும் சபரிவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

அவர்களை 108 ஆம்புலன்சில் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பானுமதி பரிதாபமாக இறந்தார். 

காயம் அடைந்த 3 பேருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிக உடலுறவு சில சமயம் திடீா் மரணத்தை ஏற்படுத்தும்..!!மருத்துவர்கள் தரும் தகவல்கள் :

உலகம், ஜூன் 08:செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும்  ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.

ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.

போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.

ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில்

உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

திருநங்கையை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சி:புதுவையில் பரபரப்பு



புதுச்சேரி, ஜூன்.8 : புதுவை சகோதரி அமைப்பின் நிறுவனர் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நான் சகோதரி அமைப்பை ஆரோவில் பகுதியில் வைத்துள்ளேன். நர்த்தகி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். திருநங்கை சமூகத்துக்கு நான் செய்த சேவையை பாராட்டி அமெரிக்க அரசு கடந்த 2010-ம் ஆண்டு என்னை அழைத்து கவுரவப்படுத்தியது. மேலும் டெல்லியில் கவர்னர் மாளிகையில் நடந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் பதவி ஏற்பு விழாவிலும் கலந்து கொண்டுள்ளேன். நான் எனது ஆரோவில் கோட்டகரை பகுதியில் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பெரியமுதலியார் சாவடியில் இருந்து கோட்டக்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். குயிலாபாளையத்தை அடுத்த கருவடிக்குப்பம் பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் என்னை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அப்போது நான் கீழே விழுந்ததில் எனக்கு இடது கை, வலது காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. 

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வெளிநாட்டுக்காரர் எனக்கு உதவி செய்தார். இதை தொடர்ந்து மர்ம ஆசாமிகள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து நான் ஆரோவில் பாதுகாப்பு சேவை மையத்தில் புகார் செய்தேன். இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு மன உளைச்சல் மற்றும் உடல் வலி காரணமாக கடந்த 4 நாட்களாக போலீசில் புகார் கூறவில்லை. நேற்று ஆரோவில் போலீசில் புகார் கூற சென்றேன்.ஆனால் போலீசார் என் புகாரை வாங்கவில்லை. கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கூற சென்ற போது அவர்களும் எனது புகாரை பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அளித்து உள்ளேன். ஆரோவில் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து ஆரோவில் பகுதிக்கு வரும் சுற்றுலா வரும் பெண்களுக்கு பாலியியல் தொந்தரவுகள் அடிக்கடி நடந்து வருகிறது. அவர்கள் தங்கள் நாட்டுக்கு செல்ல விசா கடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் இதுதொடர்பாக புகார்  சொல்வதில்லை. இது சமூக விரோதிகளுக்கு சாதகமாகி வருகிறது. அதுபோல் அந்த பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கும் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் நடந்து கொண்டுதான்

இருக்கிறது. அவர்கள் குடும்ப கவுரவம் கருதி போலீசில் புகார் அளிப்பதில்லை.

எனவே ஆரோவில் பகுதியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க புதுவை போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவருடன் இணையதள ஆசிரியர் சந்திப்பு.


சென்னை, ஜூன் 06: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் அகிலஇந்திய தலைவர் பேராசிரியர் கே. எம். காதிர் மொகிதீன் அவர்களை நமது இணையதள முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரான சகோதரர் ஜே. ஷேக்பரீத் நேரில் சந்தித்தார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது கடந்த பாராளுமன்ற தேர்தலில் முத்துப்பேட்டையை  சார்ந்த சகோதரர் M. அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு  வழங்கியதற்காக முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் வருகிற தேர்தலிலும் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டு மென்றும், வெற்றியடைந்த பின் முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மத்திய அமைச்சர் அல்லது மத்திய இணை அமைச்சர் பதவியை பெற்று கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.



தகவல்:

மண்ணடி மாலிக்.

ஆசாத்நகர் புதியபள்ளிவாசல் திறப்புவிழா குறித்து தொழிலதிபர் அல்மஹா ஹைதர் அலி பேட்டி:



முத்துப்பேட்டை, ஜூன் 06: பல்வேறு பணிகளுக்கிடையில் பிசியாக இருந்த அன்பு சகோதரர் தொழிலதிபர் S M ஹைதர் அலி அவர்களை நாம் சந்திக்க சென்றோம்,நம்மை கண்டவுடன் மிகவும் மரியாதையுடன் வரவேற்ற அண்ணன், நாம் கேட்ட கேள்விகளுக்கு சலனம் இல்லாமல் இன்முகத்துடன் பதிலளித்தார். 



கே: ஆசாத் நகர் புதிய ஜும்ஆ பள்ளிவாசல் திறப்புவிழா எப்போது?பள்ளிவாசல் கட்டுமான பணிகள் யாவும் முடிவடைந்து விட்டதா?


பதில்:  அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வருகிற ஜூன் 28-06-2013 அன்று புதிய பள்ளிவாசல் திறப்புவிழாவினை வைத்துள்ளோம் .பள்ளிவாசல் கட்டுமான பணிகள் அனைத்தும் 98% முடிவடைந்துவிட்டது .மீதமுள்ள பணிகள் கூடிய விரைவில் முடிவடைந்து விடும்.




கே:  இந்த புதிய பள்ளிவாசலானது தனிப்பட்ட நபரால் கட்டப்படுகிறதா?அல்லது பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து கட்டபடுகிறதா?




பதில்:     முதலில் இந்த பள்ளியை நான் மட்டும் தனிப்பட்ட முறையில் கட்டிகொடுக்கலாம் என்று நிய்யத் வைத்திருந்தேன். ஆனால் இதில் பொது மக்களின் பங்களிப்பும் இருந்தால் மிகவும் சிறப்பாகவும், ஏற்றமாகவும் இருக்கும் என்று பலர் என்னிடம் கருத்து கூறியதால் இந்த பள்ளி கட்டுமான நிதியை செல்வந்தர்கள்  முதல்  பாமரர்கள் வரை அனைவரிடமும் நிதி பெற்று கட்டியுள்ளோம்.




கே:      பள்ளிவாசல் கட்டுமான பணியின் மொத்த செலவு எவ்வளவு?



பதில் :    பள்ளிவாசல் கட்டுமான பணியின் மொத்த செலவு  ரூபாய்  3 கோடியாகும்.இந்த கட்டுமான பணியின் கணக்குகள் யாவும் பொதுவுடமையாக்கப்படும்.



கே:      இந்த பள்ளிவாசல் திறப்புவிழாவிற்காக எந்தந்த பகுதிகளிலிருந்து மக்கள் வரஇருக்கிறார்கள்?



பதில்:  முத்துப்பேட்டையை சுற்றியுள்ள சுமார் 4 அல்லது 5 மாவட்டங் களிலிருந்து மக்கள் வந்து கலந்து கொள்ள இருக்கிறார்கள்.




திறப்புவிழாவிற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன?பெண்களுக்கு என சிறப்பு ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளனவா?



பதில்:  திறப்புவிழா எர்பாட்டிற்கான அத்துனை பணிகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதில் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு  தனியாகவும்  தனி இட வசதிகள் செய்யப்பட உள்ளன.



கே : இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள்?



பதில்:       குவைத் நாட்டினுடைய ஷேக்   அப்துல் லத்தீப் (அல்முஹன்னதி) அரபி  சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்.மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் MA. முஸ்தபா, MA.தமீம்,வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் M .அப்துல் ரஹ்மான் MP. மற்றும் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.




கே:  இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் சிறப்பு பயான் செய்வதற்காக உலமாக்கள் ஆலிம்கள் யாரேனும் வர உள்ளனரா?



பதில் :    கண்டிப்பாக, இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு பயான் செய்வதற்காக அதிரை அப்துல் லத்தீப் ஆலிம்சா, கான் பாகவி, அன்னை கதீஜா கல்லூரியின் முதல்வர் சாஜிதா பானு ஆலிமா, உத்தமபாளையம் ராவுத்தரப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். அப்துல் சமது சாஹிப், மற்றும் கோவை அப்துல் அஜீஸ் பாகவி ஆகியோர் சிறப்பு பயான் செய்ய இருக்கிறார்கள்.




கே:  முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தை பற்றி நீங்கள் என்ன கூற நினைக்கின்றீர்கள் ?



பதில்:     முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் மிக சிறப்பாக செயல்படுகிறது .முத்துப்பேட்டையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்கிறது.முத்துப்பேட்டை செய்திகள் மட்டுமின்றி நம் சமுதாயத்திற்கு எதிராய் நடக்கும் கொடுமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.அதுமட்டு மில்லாமல்  மரண அறிவிப்புகள்,திருமண நிகழ்வுகள்,மருத்துவ தகவல்கள், சமுதாய மற்றும் அரசியல் தலைவர்களுடன்  நேர்காணல் என்று பல்வேறு சிறப்பு அம்சங்கள்  முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் உள்ளது. நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் .உங்கள் பணியை நான் பாராட்டுகிறேன்.




சந்திப்பு: ஜே: ஷேக்பரீத் 

ஜூலை 6 பேரணிக்கு அதிகவாகனங்களில் செல்ல முடிவு: தமுமுக கூட்டத்தில் தீர்மானம்.





முத்துப்பேட்டை, ஜூன் 06:  முத்துப்பேட்டை நகர தமுமுக செயற்குழு கூட்டம் இன்று நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக & மமக அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் S.முகம்மது மாலிக் மாவட்ட செயலாளர் மமக,L.தீன் முகம்மது நகர செயலாளர் மமக, A.முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக, முகம்மது யாசீன் நகர துணை தலைவர் தமுமுக & மமக,  N.சிராஜ்தீன் நகர துணை செயலாளர் தமுமுக, A. தாவுது ஷா நகர பொருளாளர் தமுமுக & மமக, S.ஜெகபர் சாதிக் ஒன்றிய செயலாளர் தமுமுக, S.முகம்மது நபில் நகர துணை செயலாளர் மமக, ஜெமில் அகமது, அமீர் பவாஸ், சேக் பரீத், மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

தீர்மானங்கள்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜுலை 6 அன்று கோட்டை நோக்கி கோரிக்கை பேரணி சம்மதமாக

முத்துப்பேட்டை இருந்து வேன் வசதி மற்றும் அதிகம் மக்களை திரட்டை ஏற்பாடு செய்யப்பட்டது ! !

இந்த பேரணி வெற்றி பெற துஆ செய்ய வேண்டும் ! !

முத்துப்பேட்டையில் முக்கிய இடங்களில் பேரணி பற்றி மக்கள் மத்தில் தெருமுனை பிரச்சாரம் செய்ய வேண்டும் ! !   ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன .



 செய்தி :MM .பைசல் BBA 

முத்துப்பேட்டை SPKM தெருவில் தீப்பிடித்து எறிந்த வாகனங்கள் :போலீசார் விசாரணை










முத்துப்பேட்டை, மே 31: முத்துப்பேட்டையில் உள்ள SPKM தெருவில் அதிகாலையில் 2 மணியளவில்  வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது .இந்த விபத்தில் ஒரு போலேரோ, ஒரு பைக், ஒரு புல்லெட், ஒரு சைக்கிள் ஆகிய வாகங்கள் தீயில் கருகின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தீப்பற்றி எறிந்த போலேரோ GT  கோல்டன் ஜஹபர் அலிக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.

தகவல்: M.M. பைசல் BBA